வெள்ளந்தித்துணிச்சலன் குதிரைக் கண் நெடுநெடன் சகிதமாய் சாராயம் குடிக்கப் போனான் இருக்கைகளில்அமர்ந்ததும் வெளியே மழை பிடித்துக் கொண்டது நிறைய நிறையக் குடித்திருந்த அனுமதிச்சீட்டில்லாத அல்பேனிய தேவதை தளும்பியபடி எழுந்து உயர்குதிகால் செருப்புச்சப்தமதிரமழை இசையின் லயத்திற்கு ஆட ஆரம்பித்தாள் சாராய விடுதியில் இழந்துபோயிருந்தஇளமையின் துக்கம்படிந்திருந்த முதிர் பெண்ணொருத்தி குதிரைக்கண்ணனிடம் என்னவேண்டுமெனக் கேட்டாள் துணிச்சலன்முந்திக் கொண்டு ஆடும்பெண்ணின் இடுப்புத்துணி வேண்டுமென்றான் முதிர்பெண்பின்புறம் திரும்பி தன்துணிவிலக்கி தொங்கியபுட்டங்களைக் காண்பித்தாள் கோபங்கொண்டகுதிரைக்கண்ணன் துணிச்சலன்முகத்தில் குத்தினான் இருக்கைசகிதமாய்கூரைபார்த்து விழுந்து கிடந்தவனை ஆட்டத்தைநிறுத்திவிட்டு அல்பேனியதேவதைவந்து தூக்கினாள் முதிர்பெண்மூன்று குவளைகளில் சிவப்புச்சாராயம் வார்த்துத் தந்தாள்.
· * சில வருடங்களுக்கு முன்பு பார்த்த ஏதோ ஒரு ஃபிரெஞ்ச் பட பாதிப்பில் எழுதியது. முன்பு இவ்வார்த்தைகளை ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதியிருந்தேன். பெண்மை போற்றதும். சற்றுத் தாமதமாய் மகளிர் தின வாழ்த்துகள்