Quantcast
Channel: அய்யனார் விஸ்வநாத்
Viewing all 133 articles
Browse latest View live

காக்கா முட்டை - துபாய் திரைப்பட விழா -2

$
0
0
kaakaa_muttai

தனுஷ் மற்றும் வெற்றி மாறன் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் காக்கா முட்டை. இயக்குனர் மணிகண்டனின் முதல் திரைப்படம். இதுவரை திரைப்பட விழாக்களில் மட்டும் திரையிடப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் அடுத்த மாதம் திரையங்குகளில் வெளியிடப்படுமாம். மால் ஆஃப் எமிரேட்ஸின் எழாவது திரையரங்கம் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது. சொற்ப தமிழ் முகங்களையும் அதிக அளவில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர் முகங்களையும் காண மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைகளுக்கான சினிமாப் பிரிவில் இடம்பெற்றிருந்ததால் அரங்கில் சில குழந்தைகளையும் பார்க்க முடிந்தது. நம் மொழி திரைப்படத்தை வெளிநாட்டு ஆட்களுடன் சேர்ந்து பார்ப்பது அலாதியான அனுபவம்தான்.
தமிழில் கடைசியாய் வெளிவந்த குழந்தைகளுக்கான படமெது என யோசித்துப் பார்த்தேன். உடனடியாய் எதுவும் நினைவிற்கு வரவில்லை. தமிழில் எல்லோருக்கும் தெரிந்த ஒரே குழந்தைகள் திரைப்படம் அஞ்சலிதான். அசமஞ்சமாக எனக்கும் அத்திரைப்படம்தான் நினைவிற்கு வந்தது. அஞ்சலி திரைப்படம் வெளிவந்தபோது திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கூடத்தின் வழியாகவே அத்திரைப்படம் காண்பிக்கப்பட்டது. கிராம்புற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள், ட்ராக்டரில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்து திரையரங்கில் திரைப்படத்தைக் காண்பித்தார்கள். நானும் அப்படித்தான் பார்த்தேன். மல்லி, பசங்க மற்றும் நாசர் நடிப்பில் வெளிவந்த கண்ணாடி என தொடங்கும் ஒரு படம் என ஒன்றன் பின் ஒன்றாக சில படங்கள் நினைவிற்கு வந்தன. ஆனால் அவை யாவுமே குழந்தைகள் சினிமா கிடையாது. இதுவரை தமிழில் குழந்தைகளை மையமாக வைத்து திரைப்படங்கள் வந்திருக்கின்றனவே தவிர குழந்தைகளுக்கான சினிமா என்ற ஒன்று நிகழவேயில்லை. இப்படி ஒரு வெற்றிடப் பின்புலத்தில் காக்கா முட்டைத் திரைப்படம் குழந்தைகள் சினிமா என்பதற்கான நியாயத்தை ஓரளவிற்குப் பூர்த்தி செய்திருக்கிறது.
kakkamuttai_2
காக்கா முட்டை திரைப்படம் சென்னை கூவம் ஆற்றை ஒட்டிய சேரிப்பகுதியில் குறிப்பாக திடீர் நகரில் வசிக்கும் இரண்டு சிறுவர்களின் சில நாட்களைப் பற்றி பேசுகிறது. அண்ணன் தம்பிகளான இருவரும் காகத்தை ஏமாற்றிவிட்டு அதன் முட்டையைத் திருடிக் குடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பதால் மற்ற சிறுவர்களிடம் காக்கா முட்டை எனும் அடைமொழிப் பெயரைப் பெற்றவர்கள். அண்ணன் பெரிய காக்கா முட்டை, தம்பி சின்ன காக்கா முட்டை. இதில் தம்பி தன் அம்மாவை வெறுப்பேற்ற தன் பெயரை சின்ன காக்கா முட்டை என்றே அழைத்துக் கொள்கிறான். காக்கா முட்டை சகோதரர்களின் தந்தை ஜெயிலில் இருக்கிறார். தாய் பட்டறையில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்துகிறார். தாயால் சிறுவர்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப இயலாமல் போகிறது. இருவரும் பள்ளிக்குப் போகாமல் அருகிலிருக்கும் ரயில் தண்டவாளத்திற்குப் போய் கூட்ஸ் ரயிலில் இருந்து கீழே விழும் கரியை சேகரித்து கடையில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயை குடும்ப செலவிற்கு தருகிறார்கள். இவர்களுடன் தந்தை வழிப் பாட்டியும் ஒரு நாயும் அந்த மிகச்சிறு வீட்டில் வசிக்கிறார்கள்.
இவர்கள் வழக்கமாய் காக்கா முட்டையை திருடிக் குடிக்கும் மிகப் பெரிய அரச மரம் ஒரு நாள் வெட்டப்படுகிறது. அங்கிருந்த காலி இடம் ஆக்ரமிக்கப்பட்டு பீட்ஸா ஹட் கடை கட்டப்படுகிறது. அந்தக் கடையின் பிரம்மாண்டமும் அங்கு வந்து பீட்ஸா அருந்தும் மனிதர்களையும் காக்கா முட்டை சகோதரர்கள் வியப்பாய் பார்க்கிறார்கள். அதே நேரத்தில் அரசு இலவசமாய் தரும் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றுக்கு இரண்டாய் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்கின்றது. தொலைக்காட்சியில் பீட்ஸா விளம்பரத்தைப் பார்க்கும் சிறுவர்கள் பீட்ஸாவை எப்படியாவது ருசித்துப் பார்த்துவிட விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் அதனால் ஏற்படும் அபத்த விளைவுகளும்தான் இத்திரைப்படத்தின் கதை.
தமிழில் வெளிவந்த விளிம்பு நிலை மனிதர்கள் குறித்தான சினிமாக்களில் வெளிப்படும் மிகைப்படுத்தப்பட்ட பொதுத் தன்மைகள் எதுவும் இத்திரைப்படத்தில் கிடையாது. சமீபத்தில் மெட்ராஸ் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் ஒரு பேட்டியில் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் பேசப்பட்ட சென்னை மொழி ”கய்தே” ”கஸ்மாலம்” போன்ற சொற்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. அதுவே வட சென்னையின் மொழியாக பிறரால் நம்பப்பட்டது. ஆனால் வடசென்னையில் அவ்வார்த்தைகளை யாருமே பிரயோகிப்பதில்லை என்றார். அவை தமிழ் சினிமாக்களில் மட்டுமே இடம்பெறுகின்றன எனவும் ஒரு குறிப்பிட்ட பகுதியை சார்ந்த சினிமா அதன் அசல் மொழி குறித்து கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை என்பது மாதிரியாகவும் அவரின் பேச்சு சில ஆழமான விஷயங்களை தொட்டுச் சென்றது. வெற்றிமாறனும் தனுஷும் வட்டார வழக்கில் கவனமுள்ளவர்கள் என்பது அவர்களின் முந்தைய படங்களான பொல்லாதவனும் ஆடுகளமும் நமக்கு நிரூபித்திருந்தன. எனவே இருவரின் கவனத்தோடு உருவான காக்கா முட்டையின் மொழியும் கதை சொல்லப்பட்ட முறையும் பாவணைகளை உடைத்து யதார்த்ததிற்கு சமீபமாக வெளிப்பட்டிருக்கிறது. திரைப்படத்தின் களமாக வறுமையும் துயரும் இருக்கிறதுதான் என்றாலும் அதை மிகக் கிண்டலாக கேலியாக அத்தனை வெள்ளந்தித்தனத்தோடு படமாக்கியிருக்கிறார்கள். குழந்தைகளின் கள்ளங் கபடமற்ற உலகம் மிகச் சரியாய் பதிவாகியிருக்கிறது. இரண்டுச் சிறுவர்களும் அபாரமாக நடித்திருக்கிறார்கள். இவர்களின் தாயாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் நடித்த பெண்ணா இது! என வியக்க வைக்கும் அளவிற்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறுவர்களின் பாட்டி மற்றும் நைனாவாக நடித்திருக்கும் ரமேஷ் போன்றோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
குழந்தைகளைப் படிக்க வைக்க இயலாத ஒரு சமூகத்தினர் சென்னையின் மையப் பகுதியில், சுழித்தோடும் சாக்கடைக் கழிவு நதிக்கு அருகாமையில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத நம் அரசு வீட்டிற்கு இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்குகிறது. இம்மாதிரி அபத்தங்களை கொதிப்பாக, பிரச்சாரமாக சொல்லாமல் மிக இயல்பாக சொல்லியிருப்பதில் இத்திரைப்படம் தனித்துவம் பெறுகிறது. தங்களுக்கு வாய்த்த வாழ்வைப் பற்றி சதா புகார் கூறிக்கொண்டிருக்காமல் அவ்வாழ்விலும் கிடைக்கும் உயிர்ப்பான தருணங்களில் கதாபாத்திரங்கள் நிறைந்து தளும்புகின்றன.
வர்க்க வித்தியாசம் உலகம் முழுக்க பொதுவான ஒன்று. பணம், நிறம், மொழி போன்றவை இந்த ஏற்றத் தாழ்வுகளுக்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியா அளவிற்கு மலைக்கும் மடுவிற்குமான வர்க்க வித்தியாசங்கள் மற்ற நாடுகளில் அரிதாகத்தான் காண முடியும். இந்த வர்க்க பேதம்தான் இத்திரைப்படத்தின் அடிநாதமாக இருக்கிறது. அதே சமயத்தில் மேல்தட்டு மனிதர்களைப் பார்த்து கீழ்தட்டு மக்கள் வெறுப்பும் வன்மமும் அடையா வண்ணம் தம் விளிம்பு வாழ்வின் சவால்களை, ரகசியங்களை, வியப்புகளை, காக்க முட்டை திரைப்படம் மிக மென்மையானதொரு மொழியில் பதிவு செய்கிறது.
திரையிடலில் இயக்குனர் மணிகண்டனும் கலந்து கொண்டார். படம் பார்த்து முடிந்த பிறகு அவருடன் பார்வையாளர்கள் மிக ஆர்வமாய் உரையாடினார்கள். பெரும்பாலானவர்களின் கேள்வி அச்சிறுவர்களைக் குறித்தே சுழன்றது. மணிகண்டன் இத்திரைப்படத்தை சென்னை திடீர் நகரில்தான் படம் பிடித்திருக்கிறார். பெரும்பாலும் அங்கு வசிக்கும் மக்களையே படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார். பல பகுதிகளை இரவில் படிம்பிடித்ததாகக் கூறுகிறார். ஆரம்பத்தில் சிறுவர்களிடம் வேலை வாங்கக் கடினமாக இருந்ததென்றும் போகப்போக அவர்கள் படத்தோடு ஒன்றிப்போனதையும் தெரிவித்தார். கதையைப் போலவே நிஜத்திலும் சிறுவர்கள் இறுதிக் காட்சியில்தான் பீட்ஸா உணவையே முதன்முறையாய் ருசித்தார்களாம். நிஜத்திலும் அவர்களுக்கு பீட்ஸாவின் சுவை பிடிக்கவில்லை என தெரிவித்தார். பின்பு பார்வையாளர்களிடமிருந்து தொடர்ந்து காக்கா முட்டை போன்ற நல்ல படங்களைக் கொடுங்கள் தமிழ் சினிமா மசாலா உலகிற்குள் போய் விடாதீர்கள் என்பன போன்ற தமிழ் சூழல் சார்ந்த வேண்டுகோள்கள் இயக்குனருக்கு விடுவிக்கப்பட்டன. இயக்குனரும் தமிழில் நல்ல படம் பண்ண ஆட்கள் இருக்கிறார்கள்தாம் ஆனால் தயாரிப்பாளர்கள் தாம் இல்லை என இந்த காக்காமுட்டை எதிர்கொண்ட தயாரிப்புச் சிக்கல்களைப் பகிர்ந்து கொண்டார். வெற்றிமாறனும் தனுஷூம் இத்திரைப்படம் உருவாவதற்கு முக்கியமான காரணங்களாக இருந்திருக்கிறார்கள். மணிகண்டன் அவர்களுக்கு தன் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
kaakaa_muttai_3
தமிழில் மாற்று சினிமாக்கள் வெளிவரும் சூழல் எப்போதுமே இருந்தது கிடையாது என்பது ஓரளவிற்கு உண்மையான வாதம்தான். பார்வையாளர்கள் இன்னும் தயாராகவில்லையா அல்லது திறமையான திரைப்பட ஆளுமைகள் உருவாகவில்லையா என்பது போன்ற விவாதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதாம் இருக்கின்றன என்றாலும் தமிழில் நல்ல சினிமாக்கள் வெளிவர என்றுமே வணிகரீதியிலான தடை இருந்தது கிடையாது. இந்த நல்ல சினிமாவிற்கான கூறுகளை பார்வையாளர்களும் படைப்பாளிகளும் சேர்ந்தேதான் வரையறுக்க வேண்டும். அதிநாயக பிம்பங்களை, துதிமனப்பான்மைகளை சினிமாவில் இருந்து முற்றாக களைந்தால் மட்டுமே தமிழில் தொடர்ந்து நல்ல சினிமாக்கள் வர வாய்ப்பிருக்கிறது. பார்வையாளர்களை அத்தகைய பிடிகளில் இருந்து வெளிவரச் செய்ய ஆழமான விமர்சனங்கள் மற்றும் சினிமா குறித்தான விரிவான பார்வைகள் உதவலாம். அத்தகைய சூழல் சமூக வலைத்தளப் பரவலாக்கம் மூலம் உருவாகி வருவதாகவே நம்புகிறேன். இது ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தி விடும் என்பதை விட தமிழ் சினிமாவில் நிறைந்திருக்கும் அபத்தங்களை ஓரளவிற்கு குறைக்கும் என எதிர்பார்க்கலாம். காக்கா முட்டை போன்ற திரைப்படங்கள் இந்நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அமைகின்றன.
இத் திரைப்படம் வணிக ரீதியிலாகவும் தமிழ் நாட்டில் வெற்றிபெற நம் வாழ்த்துகள்.

மேலும்

BIRD MAN - துபாய் திரைப்பட விழா - 3

$
0
0

BIRD MAN or The Unexpected Virtue of Ignorance 



அலெஹாந்த்ரோ யொன்ஸேல்ஸ் இனாரித்து வின் முதல் ஹாலிவுட் படமிது மெக்சிகோ வைச் சேர்ந்த இனாரித்து நான்லீனியர் கதை சொல்லல் மூலம் உலகம் முழுக்கப் பிரபலமடைந்தவர். மன உணர்வுகளை மிக ஆழமாய் ஊடுருவும் கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் தேர்ந்தவர். அமரோஸ் பெர்ரோஸ். பாபேல், 21 கிராம்ஸ், பியூட்டிபுல் ஆகிய நான்கு அற்புதமான திரைப்படங்களைத் தந்தவர். அவரின் முதல் ஹாலிவுட் படம் என்பதால் எனக்கு நிறையவே எதிர்பார்ப்பிருந்தது. ஹாலிவுட் வழமைக்குள் சிக்கிக் கொள்வாரா? அல்லது தன் பாணி கதை சொல்லலை ஹாலிவுட்டில் நிகழ்த்திக் காண்பிப்பாரா? என்பது போன்ற பல கேள்விகள் எனக்குள் இருந்தன. திரைப்படம் பார்த்து முடிந்ததும் இந்தக் கேள்விகளுக்கு ஒரு குழப்பமான பதில்தாம் கிடைத்தது. ஒரு திரைப்படமாக BIRD MAN எனக்குப் பிடித்திருந்தது. மைக்கேல் கீடனின் அசாதரணமான நடிப்பு, புதிதான கதைக்களம், விநோதமான சம்பவங்கள் என திரைப்படம் புத்தம் புது அனுபவமாகத்தான் இருந்தது ஆனால் இனாரித்துவின் வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து இத்திரைப்படம் முற்றாய் விலகியிருந்தது.
ஹாலிவுட் கருப்பு நகைச்சுவைத் திரைப்படங்களுக்குப் பெயர் போனது. Coen brothers இந்த வகைமையில் உச்சங்களைத் தொட்டவர்கள். இந்த வகைமையில் இனாரித்து பலப் புது விஷயங்களை பரீட்சித்துப் பார்த்திருக்கிறார். இத்திரைப்படத்தை Black comedy என்பதை விட சர்ரியலிசக் காமெடி என்பது மிகப் பொருத்தமாக இருக்கும். கிட்டத்தட்ட எமீர் கஸ்தூரிகா வின் Arizona dream திரைப்படம் தந்த உணர்வையே இந்த படமும் தந்தது. அரிஸோனா ட்ரீமின் புதிரும் அபத்தமும் கிண்டலும் BIRD MAN திரைப்படத்திலும் இருந்தது.
BIRD MAN திரைப்படத்தின் கதையே மைக்கேல் கீடன் என்கிற நிஜமான நடிகனின் வாழ்வைப் பார்த்துதான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த நிஜமான நடிகனின் பாதிப்பு இருக்கும் புனைவு நாயகனாக, நிஜமான நாயகனே நடித்திருப்பது இத்திரைப்படத்தின் மெட்டா தன்மையைக் கூட்டுகிறது. அசலில் மைக்கேல் கீடன் காமிக்ஸ் கதாபாத்திரமான பேட்மேனின் திரைவடிவ நாயகன். கீடன் நடிப்பில் 1989 ஆம் வருடம் BATMAN திரைப்படமும் 1992 இல் BATMAN RETURNS திரைப்படமும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. புனைவு நாயகனான ரிக்கன் தாம்ஸன் BIRDMAN சாகசக் கதாபாத்திரத்தில் நடித்து ஹாலிவுட்டில் பெரும் புகழ் பெற்ற நாயகன். தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஹாலிவுட்டில் ஓரம் கட்டப்பட்டு நாடகம் பக்கம் ஒதுங்குகிறான். தனிமையில் இருக்கும்போது ரிக்கன் தாம்ஸனுக்கு தொடர்ச்சியாக சாகஸக் கதாநாயகனான BIRDMAN னின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மீண்டும் பழைய புகழ் அடைய வேண்டுமென்கிற மனத் துரத்தல்கள் அவனிடம் இருந்து கொண்டே இருக்கிறது. பார்வையால் பொருட்களை உடைக்கச் செய்வது, விரல் அசைவில் பொருட்களை நகரச் செய்வது (telekinesis) அந்தரத்தில் உடலை மிதக்கச் செய்வது( Levitation) போன்ற சில வித்தைகளையும் ரிக்கன் தாம்ஸன் கற்று வைத்திருக்கிறான். இதனால் முழுமையாகவே தன்னை ஒரு சாகஸநாயகனாக கருதிக் கொள்கிறான். யதார்த்தம் அப்படி இல்லாததை அவனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
ரிக்கன் தாம்ஸனுடைய நாடகக் குழுவினர் ரேமண்ட் கார்வரின் “What We Talk About When We Talk About Love எனும் சிறுகதையை நாடகமாக நிகழ்த்துகிறார்கள். ரிக்கனுடைய நண்பனும் வக்கீலுமான ஜேக் இந்நாடகத்தின் தயாரிப்பாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறான். ரிக்கனின் மகள் அவனுக்கு உதவியாளரகவும் ஜேக்கின் காதலி, முன்னாள் மனைவி, ப்ராட்வே நடிகன் மைக் மற்றும் அவன் காதலி ஆகியோர் நடிகர்களாகவும் பங்காற்றுகிறார்கள். இந்த நாடக ஒத்திகையில் நிகழும் அபத்தங்கள், முரண்கள், விநோதங்கள், தனிமனித நெருக்கடிகள் யாவும் மிகப் புதிதான உணர்வை நமக்குத் தருகின்றன. மொத்த திரைப்படமும் நாடக அரங்கிற்குள்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. இருட்டான ஒப்பணை அறைகள், குறுகலான நடைபாதைகள், சதா அதிர்ந்து கொண்டே இருக்கும் ட்ரம்ஸ் ஒலி என மொத்த காட்சிப் பதிவும் நம்மை ஒரு பழைய தியேட்டருக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு மிகப் புதிதாக இருந்தது. பெரும்பாலான காட்சிகளை க்ளோஸ் அப் ஷாட்டில் படம்பிடித்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் பேச்சுக்கேற்ப காமிரா சதா அசைந்து கொண்டே இருந்தது. ஏதோ நாமே திரைப்படத்திற்குள் விழுந்து கதாபாத்திரங்களுக்கு நடுவில் நடந்து போவது போன்ற தோற்ற மயக்கமெல்லாம் எனக்கு உருவானது.

போதை மருந்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டுகொண்டிருக்கும் ரிக்கனின் மகள் கதாபாத்திரமும் அவளுக்கும் மைக்கிற்கும் இடையே நிகழும் பால்கனி உரையாடல்களும் படத்தில் இன்னொரு சுவாரசியமான இழை. ரிக்கனின் மகளான சாம் (Emma Stone) தந்தையின் மன நிலையை உணர்ந்து கொள்கிறாள் அவருக்கு சம காலத்தின் நகர்வை, சமூக வலைத்தளங்களின் நிமிடப் புகழை, அவர் மிகப் பழைய ஆள் என்பவற்றையெல்லாம் புரிய வைக்க மெனக்கெடுகிறாள். அது ரிக்கனை மேலும் மன உளைச்சலுக்குக் தள்ளுகிறது. அக்குழுவில் புதிதாக உள்ளே வரும் ப்ராட்வே நடிகனான மைக் (Edward Norton) நாடகத்தின் மொத்த பெயரையும் தட்டிக் கொண்டு போகிறான். விமர்சகர்கள் மைக்கைப் புகழ்ந்து தள்ள ரிக் மிக மோசமான சுய பச்சதாப நிலைக்கு ஆளாகிறான். பின்பு அவனே எதிர்பார்க்காத சில விஷயங்கள் அசந்தர்ப்பமாக நடந்து மீண்டும் ரிக்கன் மீடியாவில் பேசப்படும் நபராகிறான். அதிகப் புகழடைகிறான். இறுதிக் காட்சியின் புதிரை சாம் மட்டுமே அறிந்தவளாகிறாள். அவளின் அப்புன்னகைக்கு பின்னால் என்ன இருக்கும் என்பதை நம்மிடமே விட்டுவிடுகிறார்கள்.
ஹாலிவுட் வணிகத் திரைப்படங்கள் மீதான நுட்பமான கிண்டல், சமூக வலைத்தளங்களின் ஹிப்போக்ரசி போன்றவை சமதளத்திற்கு கதையை இழுத்தாலும் கீடனின் பறவை மனிதன் கீடனின் முதுகிற்குப் பின்னாலேயே நடந்து கொண்டிருப்பது, கீடன் நகரத்தின் மீது பறந்தபடியே பாய்ந்து வரும் அசாதரண மிருகங்களை நொடிப்பொழுதில் அழிப்பது போன்ற காட்சிகள் மாயவெளிக்கு நம்மை நகர்த்துகின்றன. ரேமண்ட் கார்வரின் What We Talk About When We Talk About Love சிறுகதையை நாடகமாகவே நான்கு முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அதே கதையில் பலப் புது சம்பவங்கள் நிகழ்கின்றன. அந்த சம்பவங்கள் The Unexpected Virtue of Ignorance என்கிற உப தலைப்பிற்கு காரணமாக அமைகின்றன.
BIRD MAN திரைப்படம் திரைப்பட விழாவில் இரண்டு முறை திரையிடப்பட்டது. நான் ஒரு வாரநாளில் மாலை ஆறு மணிக் காட்சிக்குப் போயிருந்தேன். அரங்கின் முன்னிருக்கைகள் கூட முழுவதுமாய் நிரம்பி இனாரித்துவின் புகழைப் பறைசாற்றின. வழக்கமாய் பிரபல இயக்குனர்களின் திரைப்படங்கள் முடிந்த பின்பு உரையாடல் இருக்காது. இத்திரைப்படத்திற்கும் அதுவே நிகழ்ந்தது. துபாய் திரைப்பட விழாவைக் கடந்த ஏழு வருடங்களாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதன் ஒழுங்கு நேர்த்தியும் விளம்பரமும் புகழும் கூடிக் கொண்டே போகின்றன என்றாலும் திரைப்படத் தேர்வுகளில் அவ்வப்போது சறுக்கிறார்கள். இது அம்மாதிரியான ஒரு வருடம்.

வம்சி வெளியீடுகள் 2015

$
0
0




1. நிலம் - பவா செல்லதுரை

பவா வின் நிலம் தொகுப்பை கையெழுத்துப் பிரதியாகவும், கணினிப் பிரதியாகவும் சென்ற வருடமே வாசித்திருந்தேன். மேலும் சில மனிதர்களை இந்நூலில் சேர்த்தால் கச்சிதமாகவிருக்கும் என நானும் ஷைலஜாக்காவும் நம்பினோம். பவா நிதானமாக இன்னும் சில மனிதர்களை இந்நூலில் கொண்டு வந்திருக்கிறார்.

2. கவர்னரின் ஹெலிகாப்டர் - எஸ்.கே.பி. கருணா

கருணாவின் கட்டுரைகள் சுவாரசியமானவை. திருவண்ணாமலை நகரத்தின் இன்னொரு முகத்தை இவரின் சிறுகதைகளும் கட்டுரைகளும் காட்சிப்படுத்துகின்றன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள்  அனைத்தும் நல்ல சிறுகதைக்கான எல்லாக் கூறுகளும் உடையவை. எங்கள் ஊரிலிருந்து இன்னொரு எழுத்தாளர் என மகிழ்ந்து கொள்ளும்படியான மொழியும் விவரணையும் கொண்டவரின் முதல் தொகுப்பு.



3. புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -பாரதிமணி

பல பரிமாணங்களையும் நெடிய அனுபவங்களையும் கொண்ட பாரதிமணி அவர்களின் குறிப்புகளாலான சுயசரிதையாக இந்நூல் வடிவம் பெற்றிருக்கிறது. பாரதி மணி அவர்களை நேரில் சந்தித்திராத சந்திக்க விருப்பம் கொண்டிருக்கும் பலருக்கும் இத் தொகுப்பு வடிகாலாக இருக்கும்.



4. யாதுமாகி - எம்.ஏ.சுசீலா

அசடனை மொழி பெயர்த்த எம்.ஏ.சுசீலா அவர்களின் முதல் நாவல்.


5. தெக்கத்தி ஆத்மாக்கள் - பா. ஜெயப்பிரகாசம்

6. எட்டு கதைகள் - இராஜேந்திர சோழன்

7. கவிஞர் சக்தி ஜோதியின் கவிதைத் தொகுப்புகள்

8. விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன்

9. 7.83 ஹெர்ட்ஸ் - க.சுதாகர்

புத்தகத் திருவிழாவில் வம்சி பதிப்பகத்தின் அரங்கு எண்கள் 582 மற்றும் 583



சமீபத்திய மூன்று சண்டைகள்

$
0
0

” நீ கேக்குற கேள்விக்குலாம் பதில் சொல்லிட்டு, உன் காசுல திங்குற மூணு வேள சோத்துக்கு பதிலா, நாலு பேரோட படுத்து சம்பாதிக்கலாம், வைடா ஃபோன.. வைடா.. ஃபோன”

தொடர்பு அறுந்துபோனது.

நளன் ஆழமாய் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான். அலைபேசியை சில நிமிடம் வெறித்தான். பின் அதைப் பத்திரமாய் கட்டிலில் எறிந்துவிட்டு குளிக்கப் போனான்.

நளன். வயது 34. ஏதோ ஒரு ஊரில் வேலை பார்க்கிறான். கதையின் முதல் வரியைச் சொன்னது அவன் மனைவி தமயந்தி. அவளும் ஏதோ ஒரு ஊரில் இருக்கிறாள். இருவருக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன. ஒரு மகள். வாரத்திற்கு இரண்டு சண்டைகளை தவறாமல் நிகழ்த்துவார்கள். ஒவ்வொரு சண்டையையும் அடுத்த சண்டை தன் தீவிரத்தாலும், உக்கிரமான வார்த்தைகளாலும் மலிவாக்கி விடுவாதால் புதுப்புது சச்சரவுகள் அதன் உச்சத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன.

நளன் கறாரானவன். ஒரு நிறுவனத்தில் நிதிப் பிரிவில் வேலை பார்க்கிறான். அதே கணக்குப் பிள்ளை புத்தி வாழ்வின் சகல கூறுகளிலும் தென்படும்.  தமயந்தி தன் ஆடைகளைத் தவிர வேறெதையும் பெரிதாய் பொருட்படுத்தாதவள். சதா இவனிடம் கணக்கு சொல்லவேண்டுமே வென கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். நேற்று காலை வாங்கிய உப்பு அரை கிலோவா? ஒரு கிலோவா? என்கிற குழப்பத்தோடுதான் அவளின் பெரும்பாலான அடுத்த நாள் காலைகள் விடியும். ஆனால் சண்டை என்று என்று வந்து விட்டால் யாரையும் ஒரு கை பார்க்கும் வல்லமை கொண்டவள்.

அலைபேசியில் கத்திவிட்டு கட்டிலில் சுருண்டு படுத்து அழுதுகொண்டிருந்த தமயந்தி, தன் நினைவிற்கு உடனே வந்த பழைய சண்டையை நினைத்துக் கொண்டாள். 

அன்று காலை நளன் ஊரிலிருந்து வந்திருந்தான். மகள் நிலா பள்ளிக்கூடம் போயிருந்தாள். வந்த உடனேயே அவளைக் கட்டிக் கொண்டு படுக்கையில் தள்ளினான். அவர்களின் சண்டைகளைப் போலவே கலவியும் ஆக்ரோஷமானது. மதியம் நிலா பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் வரை படுக்கையிலேயே கிடந்தார்கள். நளன் மதிய உணவை ஓட்டலில் சொல்லிவிட்டு நிலாவோடு விளையாடிக் கொண்டிருந்தான். அப்பாவைப் பார்த்த மகிழ்ச்சியில் நிலா வழக்கத்தை விட சற்று அதிக குறும்புகளை செய்துகொண்டிருந்தாள். அவன் வாங்கி வந்திருந்த இரண்டு பொம்மைகளை பத்தே நிமிடத்தில் உடைத்து எறிந்தாள். எரிச்சலான தமயந்தி, நிலா முதுகில் இரண்டு அடி வைத்தாள். பதிலுக்கு நிலா ஏதோ திட்ட,

“இந்த வயசுல என்ன பேச்சுடி பேசுற?” என அவள் மீதுப் பாயப் போனவளின் தலைமுடியை நளன் பிடித்து இழுத்து நிறுத்தினான்.

“எதுக்கு இப்ப முடிய பிடிச்சி இழுக்குற? அவ என்ன பேச்சு பேசுறா தெரியுமா, என்ன தடுக்கிற” என்றபடியே இவன் தலையில் ஒரு தட்டு தட்டினாள்.

அவ்வளவுதான் இவனுக்கு ஆத்திரம் பொங்கிவிட்டது.

”பச்ச குழந்தைய அடிக்கிற, ஏன்னு கேட்ட புருஷனையும் அடிக்கிற, என்னடி ரொம்ப குளிர் விட்டு போச்சா?”

என கன்னத்தில் ஒரு அறை விட்டான். அவளும் இவன் மீது பாய முயன்று தோற்றாள். ஆனால் திருப்பி அடிக்க முடியாததின் இயலாமையை அவனை கடுமையாய் வசைந்து தீர்த்துக் கொண்டாள்.

”தேவ்டியாப் பையா, திருட்டுத் தேவ்டியாப் பையா, அடிடா அடி.. என்னக் கொன்னு போட்டுடு..” என அலறினாள்

திடீர் வசையால் திகைத்தவன் “என்னது.. என்னது.. என இன்னும் ரெண்டு அடியை அவளின் வாய் மீது போட்டான்

நிலா இதையெல்லாம் பார்த்து பயந்து, வீறிட்டழுதபடியே அடுத்த வீட்டிலிருக்கும் பாட்டி வீட்டிற்கு ஓடினாள்.

இவர்கள் போட்ட சப்தம் தெருவிற்கே கேட்டது. பக்கத்து வீட்டிலிருந்த நளனின் அப்பாவும் அம்மாவும் உள்ளே வந்தார்கள்

தமயந்தி குளியலறையில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, குத்துக் காலிட்டு உட்கார்ந்து கொண்டு தேவ்டியாப் பையன்… தேவ்டியாப் பையன்… என முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

பதற்றமாய் உள்ளே வந்த அப்பா, “என்னடா பையா, என்னடா சண்ட?” என்றார்

எதுவும் சொல்லாமல் நளன் கோபத்தில் மூச்சிரைத்து நின்று கொண்டிருந்தான்.

“படிச்ச பசங்கதானடா நீங்க, இவ்ளோ அசிங்கமாவா சண்ட போட்டுப்பீங்க?”

எதுவும் பேசாமல் வெளியே போனான். இருட்டிய பிறகு பீர் வாசனையோடு வந்தான். நிலா தூங்கிப் போயிருக்க. இவள் காத்துக் கொண்டிருந்தாள். சமாதானமாகிவிட்டார்கள்.

குளித்து விட்டு வந்த பின்பும் ”படுத்து சம்பாதிச்சி” என்கிற சொல்லே நளன் காதில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தது. அருகில் இருந்தால் அடித்து நொறுக்கியிருக்கலாம். என்ன செய்வது?.. என்ன செய்வது?.. என அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். மறுபடியும் அவளைத் தொலைபேசியில் கூப்பிட்டு ஆத்திரம் தீர திட்டினால் என்ன?  அலைபேசியில் அழைத்துப் பார்த்தான். சுவிட்ச் ஆஃப் செய்து விட்டிருக்கிறாள்.

இத்தனைக்கும், ”போன மாசம் கொடுத்த பணத்துல ஐயாயிரம் ரூபாய்க்கு கணக்கு வரலயே என்ன செலவு பண்ண?” என சாந்தமாய்த்தான் கேட்டான்.

“எழுதி வைக்க மறந்து போய்ட்டேன், பன்ற செலவுக்கு எல்லாத்துக்கும் கணக்கு சொல்லியே ஆகனுமா?”

என அவள் கோபமாய் திரும்பக் கேட்க, இவன் பதில் பேச, பிரச்சினை முதல் வரியில் வந்து நின்றது. 

பதிலுக்கு எதுவும் செய்ய முடியாத ஏமாற்றத்தோடு கிளம்பிக் கீழே வந்து பைக்கை உதைத்தான். முன்பு நடந்த சண்டை ஒன்று அவன் நினைவில் ஓடியது.

நளனின் ஃபேஸ்புக் தோழிகள் இருவர் அவனைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர். சிடுசிடுப்பை சிரமப்பட்டு மறைத்துக் கொண்டு தமயந்தி அவர்களுக்கு காபி கொடுத்து விட்டு, மதிய உணவு பற்றி மூச்சு விடாமல் இருந்தாள்.

பஸ் ஏற்றி விட்டு வருவதாக சொல்லிவிட்டு அவர்களோடு கிளம்பிப் போன நளன் மாலை வரை திரும்பவில்லை. அவனின் அலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

தமயந்தி கொதித்துக் கொண்டிருந்தாள்.

நளனின் தோழிகள் இருவரும் நளனிடம் ட்ரீட் கேட்டார்கள். மதியம் அவர்களை சாப்பிட்டுப் போகச் சொல்லாத தமயந்தியின் மீது கோபத்திலிருந்தவன், அவர்களைக் கூட்டிக் கொண்டு அருகிலிருந்த மூன்று நட்சத்திர ஓட்டலுக்குப் போனான். மூவரும் பியர் அருந்தினார்கள். கொறிக்க நல்ல உணவும் சேர்ந்து கொள்ளவே பேச்சும் பியரும் மாலை வரை நீண்டது.

ஒரு வழியாய் பில்லைக் கொடுத்துவிட்டு, பஸ் ஏற்றி விட்டு தள்ளாட்டமாய் வீடு வந்தவனை தமயந்தி எரித்து விடுவது போல் பார்த்தபடியே கேட்டாள்.

”எந்த லாட்ஜூல ரூம் போட்ட, ஒருத்தியா? ரெண்டு பேருமேவா?

நல்ல போதையிலும், ஏகத்திற்கும் பணம் செலவாகியிருந்த துக்கத்திலும் இருந்தவன் அவளை ஓங்கி அறைய முயன்றான். சுதாரித்து விலகிக் கொண்ட தமயந்தி அவன் இடுப்பின் மீது உதைத்தாள். கீழே விழுந்தவனின் சட்டையைப் பிடித்து தூக்கி கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள். நளன் திருப்பி அடிக்கத் தெம்பில்லாமல் அப்படியே சரிந்தான்.

அதிகாலையில் விழிப்பு வந்தவன் அவசரமாய் படுக்கையைத் திரும்பிப் பார்த்தான். அருகில் தமயந்தி இல்லை. படுக்கையின் மறு முனையில் நிலா கிடந்தாள். நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் நினைவிற்கு வந்ததும் ஆத்திரமாய் எழுந்து ஹாலிற்கு வந்தான். ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு முகத்தை குத்துக் காலில் புதைத்திருந்தவளைப் பார்த்தான். அவள் அருகில் போய் தலைமுடியைப் பிடித்து நிமிர்த்தினான். கண்கள் ரத்தச் சிவப்பில் குளமாகி இருந்தன. 

எழுந்து இவனை அணைத்துக் கொண்டாள். சமாதானமாகி விட்டார்கள்.

நளனால் தலைக்குள் ஓடும் பழைய சண்டைகள் குறித்தான சப்தங்களை அலுவலகம் போகும் வரை  தாக்குப் பிடிக்க முடியவில்லை. வண்டியை பாதி வழியில் ஓரம் கட்டினான். அலைபேசியில் அவளை அழைத்தான். இப்போது ரிங் போனது. எடுத்தாள்.

”குடும்பப் பொண்ணு மாதிரியா பேசுற? என்ன செலவு பண்ணோம்னு எழுதி வச்சா என்னா? நான் என்ன நாலு பொண்ணுங்களோட படுத்தா சம்பாதிக்கிறேன். ஒழைச்சுதாண்டி சம்பாதிக்கிறேன் “ 

லேசாய் விசும்பும் சப்தம் கேட்டது. 

அலைபேசியை அவசரமாய் துண்டித்துவிட்டு பைக்கை உதைத்தான்.

 * ரேமண்ட் கார்வரின் படைப்புகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த பாதிப்பில் இதை எழுதிப் பார்த்தேன். சரியாக வந்திருப்பதாக உணரவே இங்கு.. 

ஓநாய்கள்

$
0
0

ஓநாய்கள்

விரட்டிவந்ததின்
நிறம்தெரியவில்லை
ஓநாய்தானா?
தெரியவில்லை
ஆனால்
நாயில்லை
முன்பொருஇரவில்
வாகனவெளிச்சத்தில்பார்த்திருந்த
கழுதைப்புலி
செந்நாய்
பல்லிழந்தநரி
இவையெதுவுமில்லை

ஓநாயாய்இருக்கலாம்

இருள்விலகியிராத கருக்கல்
மரங்கள்தூங்கும் சரிவு
சகலக்கருமை
ஒருதிசையிலிருந்துஉறுமல்
இன்னொன்றின்வன்மச்சீற்றம்
பக்கவாட்டுஊளை
பின்னிருந்துஇன்னொன்றின்
கணுக்கால் கவ்வல்

ஓநாய்கூட்டம்தான்

சதையொழுகும்காலினை
இழுத்துக்கொண்டு
ஓடமுடியவில்லை
மலைச்சரிவின்
ஒருமுனையிலிருந்து
உருளுகிறதுஉடல்
நீர்பூச்சி வளையம்வளையமாய்
சுவாசித்துக்கொண்டிருக்கும்
ஓடையின்
குட்டிநீள்கரங்கள்
இன்னொருநீர்பூச்சியாய்
என்னையும்வாங்கிக்கொள்கிறது

குமிழ்களை
உண்டாக்கியபடி
உள்ளமிழும்என்னுடல்
ஓநாய்களின்
நிறக்கவலையை

விட்டிருக்கும்.

ஓரிதழ் பூ - அத்தியாயம் இரண்டு

$
0
0

பயப்படவைக்கிறஅழகுஅவ. அவளோடகண்களசந்திச்சநொடிசெத்தாலும்மறக்காது. பெண்பார்க்கபோயிருந்தப்பகொஞ்சம்கூச்சத்தோடஅவங்கவீட்லதலகுனிஞ்சிஉட்கார்ந்திருந்தேன். மருதாணிசிவப்பேறியபாதங்கள்மெல்லநடந்துவந்திச்சி. கொலுசுதவழ்ந்துதவழ்ந்துவரசப்தம். அவளோடபாதங்கள்அவ்வளவுகச்சிதமாஅளவெடுத்துசெதுக்கினமாதிரிஇருந்தது. நிமிர்ந்துமுகம்பாக்கவேதோணல. பாதங்களையேபாத்திட்டிருந்தேன். கூடவந்தவங்ககிண்டல்கேட்டுநிமிர்ந்துபாத்தேன். அவரொம்பநேரமாஎன்னையேபாத்திட்டிருந்தாபோல. அவ்வளவுஆழமாஒருபார்வ. சடார்னுசிலிர்த்துபோச்சி. அவகண்களதாண்டிஎன்னாலஎதையும்பாக்கமுடியல. எழுந்துவெளியஓடிடனும்போலஇருந்தது. இவ்ளோஅழகஎன்னாலதாங்கமுடியாதுன்னுதோணுச்சி. அவமுகத்தசரியாபாக்ககூடமுடியாம, எப்படாஇந்தபெண்பார்க்கிற  சம்பிரதாயம்முடியும்னுநெருப்புமேலஉட்கார்ந்திருந்தேன். முடிஞ்சதும்ஓட்டமும்நடையுமாவந்துட்டேன். அம்மாகிட்டபொண்ணபிடிக்கலன்னுட்டேன். ஏண்டான்னுகேட்டதுக்குபதிலேதெரியல. அப்புறம்தொடர்ந்துஅந்தபார்வைராத்திரிலதூங்கவிடாமஇம்சிச்சது. அம்மாவும்அந்தபொண்ணையேமுடிச்சிடலாம்னுவற்புறுத்துனாங்க. மூணுநாள்கழிச்சிபட்னுசரின்னுட்டேன்.
தாலிகட்டிமுடிச்சப்புறம்தான்மணமேடைலஅவளசகஜமாஎன்னாலபாக்கமுடிஞ்சது. சந்தனநிறம். என்னவிடகொஞ்சம்உயரம். அய்யோஅவஉடம்பஉங்ககிட்டஎன்னாலசொல்லவேமுடியாது. சாகடிக்கிறஅழகுஅவ. முதலிரவு. அவளதொட்டஉடனேயேசிலிர்த்திடுச்சி. அணைச்சஉடனேஎனக்குஎல்லாமேஆகிடுச்சி. மூணுமாசம்இப்படியேபோச்சு. ஒரேஒருமுறகூடஎன்னாலசரியாபண்ணமுடியல. ஆண்மகுறைவாஇருக்குமோன்னுசந்தேகமாஇருந்தது. எனக்குபழக்கமானஒருபெண்ணிருந்தா. அவளோடகல்யாணத்துக்குமுன்னவேஎனக்குதொடர்புஇருந்தது. அவளுக்கும்என்னபிடிக்கும். அவளோடஒருநாள்உறவுவச்சிகிட்டேன். உறவுதிருப்தியாஇருந்தது. பிழிஞ்சிட்டடான்னுஆசையாஅலுத்துகிட்டா. அப்போபிரச்சினமனசுதான்னுதெளிவாகி, ஒருநாள்நல்லாகுடிச்சிட்டுபோனேன். நல்லவெளிச்சத்துலஅவளோடதுணிகளமுழுசாவிலக்கினேன். தகதகன்னுஅவளோடமுலைகள்ரெண்டும்ஜொலிச்சது. மிரண்டுட்டேன். மெதுவா  அவஇடுப்புக்குகீழபாத்தப்பஅய்யோஅவ்வளவுபெரியபூ. அம்மா! எனக்குமயிர்க்கால்லாம்நின்னுடுச்சி. என்னமன்னிச்சிடுன்னுசொல்லிட்டுவெளிலஓடிவந்தேன். இருட்டுலஎந்தபக்கம்போறேன்னுதெரியாதஓட்டம். ஓடிக்களைச்சிஎங்கயோவிழுந்துமயங்கிட்டேன். மறுநாள்தான்எழுந்திரிச்சிபார்த்தேன். என்னாலஅவளோடவாழவேமுடியாது. அவமோகினி, சாமி. அவளப்பாக்கவேபயமாஇருக்கு. என்னாலவீட்டவிட்டுஓடவும்முடியல. அம்மாவதனியாவிட்டுப்போகவும்முடியாது. “

சாமிஅசையாமல்உட்கார்ந்துகேட்டுக்கொண்டிருந்தார்.

போதைதெளிந்துஎழுந்து  அவர்முன்னால்நடக்கநான்பின்தொடர்ந்தேன். வேட்டவலம்ரோட்டிலிருந்துவெகுதூரம்நடந்துசெங்கம்ரோட்டிற்குவந்துவிட்டோம். இரமணாசிரமம்தாண்டியதும்சாமிசடாரெனவலதுபுறம்திரும்பிகருமாரியம்மன்கோயில்தாண்டி, பலாக்குளத்திட்டில்  போய்அமர்ந்துகொண்டார். அவர்உட்கார்ந்தஇடத்திற்கும்கீழ்இறங்கிஇன்னொருகருங்கல்லில்உட்கார்ந்துகொண்டேன். என்னஏதுஎன்றெல்லாம்அவர்கேட்கவில்லைநானாய்தான்சொல்லஆரம்பித்தேன். சாமிஎதுவும்பேசாமல்தொடர்ந்துமெளனமாய்இருந்தார். குளத்தில்பாதிஅளவிற்குதான்நீர்இருந்தது. பாசிக்குளம்கருமையாய்எந்தஅசைவுமேஇல்லாமல்தூங்கிக்கிடந்தது. எனக்குப்புகைக்கவேண்டும்போல்இருந்தது. ஆனால்மீண்டும்கஞ்சாப்புகையைஉள்ளிழுக்கபயமாய்இருந்தது

அவராய்ஆரம்பிக்கட்டும்எனக்காத்திருந்தேன்.

நிலாஅவ்வப்போதுமேகங்களுக்கிடையில்எட்டிப்பார்த்ததேதவிரமுழுவதுமாய்தன்னைக்காட்டிக்கொள்ளவில்லை. மிகஅருகில்மலைதுவங்கியது. நேரம்என்னவாகிஇருக்கும்எனத்தெரியவில்லை. ஒருமணியைதாண்டிஇருக்கலாம். மனிதசஞ்சாரமேஇல்லாதஇந்தஇரவுஎனக்குப்புதிது. பிறந்ததுமுதல்திருவண்ணாமலையில்தான்இருக்கிறேன்என்றாலும்இந்தப்பகுதிகளுக்குவந்ததேகிடையாது. பலாக்குளத்தின்கரையோரங்களில்மிகப்பிரம்மாண்டமானமரங்கள்அடர்த்தியாய்கருமையைப்பூசிக்கொண்டுநின்றுகொண்டிருந்தன. காலிடுக்கிலிருந்துபாம்புஏதாவதுவருமா? எனயோசனையாகஇருந்தது. பாம்பின்நினைவுவந்தபிறகுஉட்காரமுடியவில்லை. எழுந்துகரையில்நடக்கஆரம்பித்தேன்.

சாமிதொண்டையைக்கனைத்துக்கொண்டார்.

வீட்டுக்குபோ. பொண்டாட்டியோடசந்தோசமாஇருக்கவழியபாரு. உம்பொண்டாட்டிமோகினியும்கிடையாதுசாமியும்கிடையாது. சாதாரணபொம்பளதான். எல்லாப்பொம்பளக்கிம்இருக்கிறதுதான்அவளுக்கும்இருக்கு. பூஇருக்குபுண்ணாக்குஇருக்குன்னுநீயாஎதையும்கற்பனபண்ணிக்காத

மெளனமாகஇருந்தேன்

வேலைக்குஏதாச்சும்போறியா?”

ம். ஸ்கூல்வாத்தியார்

அடப்பாவிபுள்ளைங்களுக்குபாடம்சொல்லிக்கொடுக்கிறவனாநீ?”

தலையைகுனிந்துகொண்டேன்

பள்ளிகோடம்போறதில்லயா?”

இப்பஒருமாசமாபோறதில்ல. மெடிக்கல்லீவ். “

எப்பகல்யாணம்ஆச்சிஉனக்கு?”

நாலுமாசம்இருக்கும்

அப்பஇதுஏதோபிரம்ம. உம்பொண்டாட்டியஎங்காச்சிம்தனியாகூட்டிப்போ. தகிரியமாஅவளபாரு. எல்லாம்சரியாபோய்டும்.”

எதுவும்பேசாமல்மெளனம்காத்தேன்.

பொம்பளப்பாவம்சும்மாவிடாதுடா. அவளஇப்படிதவிக்கவிடாத. ஒழுங்காகுடுத்தனம்நடத்துறவழியபாரு.”

எழுந்துவீட்டிற்காய்நடக்கஆரம்பித்தேன். அவரைத்திரும்பிக்கூடபார்க்கவில்லை.


வீதிநாய்களும்குறைக்கசோம்பல்படும்நேரத்தில்கதவைத்தட்டினேன். லேசாய்த்தான்தட்டினேன். வாசல்பல்புபளிச்செனஎரிந்தது. சத்தமேஇல்லாமல்கதவுதிறந்தது. கதவுக்குப்பின்னால்பதுங்கிக்கொண்டுமிரண்டபெரியவிழிகளால்என்னைப்பார்த்தாள். ஹாலில்நீலவிளக்கு. பார்வையைதாழ்த்திக்கொண்டுசற்றுமுன்னால்போய்தயக்கமாய்திரும்பிப்பார்த்தேன். நீலவெளிச்சத்தில்பெரியபெரியபூப்போட்டநைட்டியில்பூப்பூவாய்நின்றுகொண்டிருந்தாள். பூபூமனம்அடிக்கத்தொடங்கியதுஅடித்தடித்துபூபூபூஎனஉரக்ககத்தஆரம்பித்தது. தலையைப்பிடித்துக்கொண்டுதோட்டத்திற்காய்ஓடினேன்வெளிச்சுவரிற்கும்மாடிக்குப்போகும்படிக்கட்டிற்கும்இடையேஒருமிகச்சிறியஇடம்இருக்கும். அங்குபோய்உடல்குறுக்கிப்படுத்துக்கொண்டேன்.

- மேலும்

ஓரிதழ் பூ அத்தியாயம் மூன்று

$
0
0
 
அமுதாக்காஇந்தாமருதாணிப்பூ

! ஹப்பா!என்னவாசன. இந்தவாசனஒருமாதிரிஇருக்கில்ல

ஆமா

உனக்கும்பிடிக்குமாமருதாணிப்பூ

பிடிக்கும்ஆனாரொம்பபிடிச்சதுமரமல்லிப்பூதான்

ஏன்மரமல்லிபிடிக்கும்?”

அதுலபீப்பிஊதலாம்”

ஐயேஏழாவதுவந்துட்டஇன்னுமாபீப்பிலாம்ஊதுற

அதனாலஎன்ன?அக்காகார்ட்ஸ்வெளாடலாமா?”

போடாபோர். நீதான்ஜெயிப்ப

வேறஎன்னபண்ணலாம்

சும்மாஇருக்கலாம்

உனக்குரஜினிபிடிக்குமாகமல்பிடிக்குமாடா?”

ரஜினி. உனக்கு?”

கமல். என்னகலர்பிடிக்கும்?”

நீலம். உனக்கு?”

மெருன். ரொம்பபிடிச்சபடம்எது?”

ராஜாசின்னரோஜா.உனக்கு

அலைகள்ஓய்வதில்லை. உன்பிரெண்ட்ஸெல்லாம்யாரு?”

முருகன், கோபிஅப்புறம்ரமா. உன்பிரண்ட்ஸ்லாம்யாரு?”

ப்ச்யாருமேஇல்ல. நான்தான்பத்தாவதுக்கப்புறம்ஸ்கூல்போகலயே

கூடபடிச்சவங்க?”

பொண்ணுங்களுக்கெல்லாம்கல்யாணம்ஆய்டுச்சி. தெரிஞ்சஒண்ணு 
ரெண்டுபசங்களும்வெளியூருக்குபடிக்கபோய்ட்டாங்க

உனக்குஎப்பக்காகல்யாணம்?”

அடபோடா

ஏங்க்கா?”

எனக்குகல்யாணமேவேணாம்

ஏங்க்கா?”

என்னவோபிடிக்கலடா

போனமாசம்உன்னபொண்ணுபாக்கவந்தாங்களே. மாப்ளகூடநல்லா 
இருந்ததாஅம்மாசொன்னாங்க. அவங்கலட்டர்போடலயாக்கா?”

இல்லடா.”

ஏன்உன்னபிடிக்கலயாமா?”

எங்கதரித்திரத்தபிடிக்காமஇருந்திருக்கும்

காசுகேட்கறாங்களாக்கா?”

ஆமாடாஓசிலயாராச்சும்கல்யாணம்பண்ணிப்பாங்களா?”

உங்கஅப்பாதான்வேலைக்குபோறாரேஅவர்கிட்டகாசுஇல்லயா?”

அவர்தான்சாயங்காலம்ஆனாகுடிச்சிடுறாரோஎப்படிஇருக்கும்?”

நல்லவேளஎனக்குஅப்பாஇல்ல

உண்மதாண்டா. எனக்குஅப்பான்னுஒருத்தர்இல்லாமஇருந்திருந்தாகூட 
நல்லாருந்துருக்கும்.”
..

செம்பருத்திபூத்திருக்காடாஉங்கவீட்ல?”

உனக்குதான்அடுக்குசெம்பருத்திபிடிக்காதே

பரவால்ல. வாபோய்பறிக்கலாம்

தலைலதான்மல்லிஇருக்கேஎதுக்குசெம்பருத்தி?”

சாமிக்குடா. சாயங்காலம்கோயிலுக்குபோலாம்

அப்பசாயங்காலம்பறிச்சிக்கலாம்

அப்பவாடிடும்டா

போக்காநான்வரல

ஏண்டா? “

பாட்டிஏதாச்சிம்வேலவைக்கும்

அம்மாஎங்க

ஸ்கூல்க்குபோயாச்சி

இன்னிக்குசனிக்கிழமையாச்சே

அடுத்தவாரம்  ஏதோஇன்ஸ்பெக்சனாம்லாக்கொடுக்கனும்னுபோயிருக்கு

உங்கஅம்மாரொம்பநல்லவங்கடா

ஆமாக்கா

உன்அப்பாவநினைவிருக்காஉனக்கு?”

இல்லக்கா. நான்வயித்துலஇருக்கும்போதேசெத்துட்டதாஅம்மாசொல்வாங்க

உங்கஅம்மாபாவம்டாதனியாஉன்னவளத்திருக்காங்க

பாட்டிதான்இருக்காங்களே

இதுவேறதனிடா

என்னவேற?”

ஆம்பளதுணைஇல்லாமதனியாஇருக்கிறது

எதுக்குஆம்பளதுண?”

ஒருபாதுகாப்புக்குதான்

அதான்நான்இருக்கனே

ஆமாஇவருபெரியஆம்பள

ஆமாநான்ஆம்பளதான்

அப்பஎன்னகல்யாணம்பண்ணிக்கிறியா?”

ச்சீநீஎனக்குஅக்காவாச்சே

அதுனாலஎன்னடா?”

பே

இப்பவேணாம்டாவளந்துஎன்னகல்யாணம்பண்ணிக்க

அய்யபே

முகம்எப்படிசெவக்குதுபாரு

போநாவீட்டுக்குபோறேன்

டேய்ரவிநில்றாநில்றா


”பேபேபே”


ஓட்டமாய்வீட்டிற்குவந்துவிட்டேன். பாட்டிகூடத்தில்உட்கார்ந்துகொண்டுகீரைஆய்ந்துகொண்டிருந்தது. என்னைநிமிர்ந்துபார்த்துஎங்கடாபோய்சுத்துறஎனஅதட்டியது. மறுபேச்சுபேசாமல். செம்பருத்திசெடியிடம்போய்நின்றேன். கையகலத்தில்சிவப்படுக்காய்பூத்திருந்தஒருபூவிடம்கிசுகிசுப்பாய்சொன்னேன்

நான்வளந்துஅமுதாக்காவகல்யாணம்பண்ணிப்பேன்

- மேலும்

புகைப்படம் : பினுபாஸ்கர்

ஓரிதழ் பூ : அத்தியாயம் நான்கு

$
0
0
அகத்தியமாமுனிபொதிகைமலைச்சரிவிலிருந்துகடுங்கோபத்துடன்புயலெனத்தரையிறங்கிக்கொண்டிருந்தார். மலைச்சரிவிலிருந்தஅடர்த்தியானமரங்கள்அவருடையமூச்சுக்காற்றின்வேகத்தைதாங்கமுடியாமல்பேயாட்டம்ஆடின. மாமுனிநடந்துபோவதுபூமியிலாஆகாசத்திலாஎனக்கண்டறியமுடியாதுவனமிருகங்கள்திகைத்துநின்றன. கோபம்குறையும்போதுமாமுனிதன்இடுப்பில்சொருகியிருந்தஓலைச்சுவடியைஎடுத்துப்படித்துமீண்டும்கோபம்கொண்டார். தலையில்நெட்டுக்குத்தாய்போட்டிருந்தகொண்டையைஉருவிகாற்றில்அலசினார். உடல்சுருண்டுகிடந்தமலைப்பாம்பொன்றுபொத்தெனதரையில்விழுந்துநெளிந்துமறைந்தது. மலையைவிட்டிறங்கிஎங்குபோவதுஎனசற்றுநேரம்குழம்பினார். காலத்தைக்கணக்குப்போட்டுப்பார்த்ததில்இருநூறுவருடங்கள்கடந்திருப்பதைஉணர்ந்துகலங்கினார். பொதிகைமலையையேசல்லடைபோட்டுசலித்தும்அவரால்அப்பூவைக்கண்டறியமுடியவில்லை. அகத்தீஸ்வரம்போய்சிலவருடங்கள்ஓய்வெடுக்கவேண்டியதுதான்எனநினைத்துக்கொண்டேகோபத்தைக்குறைத்துக்கொண்டுமெதுவாய்நடக்கஆரம்பித்தார்.

மாமுனியின்கோபம்கண்டுபயந்தசூரியன்விரைவில்மறைந்துவிட, நிலவுவேறுவழியில்லாதுதலைகாட்டிக்கொண்டிருந்தது. மாமுனிகோபம்குறைந்துசாதாரணமனிதர்களைப்போலசாலையில்நடந்துபோய்கொண்டிருந்தார். ஆற்றாமைதாங்காமல்மீண்டும்அந்தஓலைச்சுவடியைஎடுத்துசத்தமாய்வாசித்தார் 

கொம்பில்லாஇலையில்லாக்காம்பில்லாஓரிதழ்பூவாம்கண்டுதெளிந்துஉண்டுநீங்கி-நிலையில்நிறுத்துபிளவில்பூக்கும்மலரையறியவேணுங்கண்யறிந்தகண்ணைசுவைத்தநாவைஅறிந்தறிந்துயடைவாய்உண்மத்தம்.

இருநூறுவருடங்களாய்மாமுனிதேடிக்கண்டறியமுடியாமல்போனது, இப்பாடல்சொல்லும்ஓரிதழ்பூதான். இந்தப்பாடலைஎழுதியதுயார்என்பதையும்மாமுனியால்கண்டுபிடிக்கமுடியவில்லை. போகரின்எழுத்துநடைசாயல்இருந்தாலும்கம்பரோதொல்காப்பியரோஎழுதியிருக்கவும்வாய்ப்புகள்உண்டு. கொல்லிமலைக்குப்போய்போகரைக்கண்டுதெளிவடையலாம்என்றாலும்அவர்எள்ளிநகையாடிவிடுவாரோ?என்றஅச்சம்மாமுனிக்குஇருந்தது. ஐந்துசாஸ்திரங்கள், ஐந்திலக்கணக்கங்கள்உட்படஎண்ணற்றநூல்களைஎழுதியஅகத்தியமாமுனிஒருகவிதைசொல்லும்பூவைத்தேடிஇருநூறுவருடங்கள்அலைந்ததைவெளியில்சொல்லவேதயங்கியும்சின்னதொருஅவமானத்தோடும்வெறுப்போடும்நடந்துகொண்டிருந்தார்.

அகத்தீஸ்வரம்போகும்வழியிலிருக்கும்திருவண்ணாமலையைஅவர்வந்தடைந்தபோதுநேரம்நள்ளிரவைத்தாண்டியிருந்தது. களைப்பும்சோர்வும்மாமுனிக்குகிடையாதென்றாலும்மானிடஉருவில்ஏராளமானசித்தர்கள்திருவண்ணாமலையைசுற்றிவருவதைஅவர்அறிவார். தானும்மானிடஉருவிற்குமாறியாரிடமாவதுஇந்தப்பாடலின்விளக்கத்தைக்கேட்கலாம்என்றசமயோசிதயோசனைஅவருக்குஉதித்தது.

சடாரெனஉருவம்மாற்றிஒருசாதாரணத்துறவியின்உருவம்எடுத்தார்மலைசுற்றும்பாதைக்காய்நடக்கஆரம்பித்தார். காவிஉடையும்சடைமுடியுமாய்ஏராளமானமனிதர்கள்  சாலையோரத்தில்படுத்துதூங்கிக்கொண்டிருந்தார்கள். கல்மண்டபங்களில், அடர்ந்தமரத்தடிகளில், கும்பல்கும்பலாய்தூங்கிக்கொண்டிருந்தவர்களைப்பார்த்துக்கொண்டேமாமுனிநடந்துகொண்டிருந்தார். யாரைப்பார்த்துபேசுவதுஎனபிடிபடாமல்நடந்துகொண்டிருந்தார்.

திடீரெனமழைகொட்டஆரம்பித்தது. மழைவருவதற்கானஎந்தஅறிகுறிகளும்இல்லாமல்திடீரெனகொட்டஆரம்பித்ததும்அதுவரைதூங்கிக்கொண்டிருந்தமக்கள்எழுந்துஅருகாமையிலிருந்தகூரைகளைநோக்கிஓடினர். மாமுனிகருமாரியம்மன்கோவிலுக்காய்ஒதுங்கினார்.

ஒருமின்னல்பளீரெனவெட்டியது. அந்தவெளிச்சம்கண்டுமொத்தகூட்டமும்ஒருநிமிடம்அலறிஅடங்கியதுஅந்தவெளிச்சத்தில்மாமுனிஒருவரைக்கண்டார். அவர்கோவிலுக்குஅருகிலிருந்தகுளக்கரைத்திட்டில்படுத்துதூங்கிக்கொண்டிருந்தார். சற்றுவிநோதமாய்உணர்ந்தமாமுனிமழைபெய்வதைப்பொருட்படுத்தாதுகூரைவிட்டகன்றுஅவரைநோக்கிப்போனார்.

மழைகடும்சப்தத்தோடுதாரைதாரையாய்ஊற்றிக்கொண்டிருந்தது. மாமுனிதூங்கிக்கொண்டிருந்தவரின்அருகில்போய்அவரைத்தட்டிஎழுப்பினார். கைத்தாங்கலாய்கூட்டிக்கொண்டுஅருகிலிருந்தமரத்தடிநோக்கிநடந்தார். மழையோடுதிடீரெனகுளிர்காற்றும்சேர்ந்துகொண்டது. மாமுனிநடுங்கியவாறுநின்றுகொண்டிருந்தஅவரிடம்கேட்டார்

மழைபெய்வதைதாங்கள்உணரவில்லையா?”

என்னாது

மழமழ

ம்க்கும்கொஞ்சம்ஜாஸ்தியாபூடுச்சி. தெர்ல

மாமுனிக்குஅவரிடம்ஏதோவிசேஷம்இருப்பதுபோல்தோன்றியது. கொஞ்சமும்தயங்காமல்கேட்டுவிட்டார்

ஐயாஒருபாடல்சொல்லும்பூபற்றிஎனக்கொருஐயம், கேட்கட்டுமா?”

என்னாது?”

பாடல், பூபற்றியபாடல்

என்னாங்கடா  உங்களோடரோதன. இவ்ளோநேரம்ஒருத்தன்பூவபாத்தேன்மயிரபாத்தேன்னுஉயிரவாங்கிட்டுஇப்பதான்போனான்ஒடனேநீவந்துநிக்குற என்னடாபூவு

ஓரிதழ்பூஐயா

ஒண்ணுபண்ணு, நாளைக்குகாலைலஎன்னோடவா, எப்படியும்அவன்அங்கதான்இருக்கணும். அவங்கிட்டகேள். அவம்வாத்திவேற. ஒனக்குபுரியும்படிசொல்வான்.இப்பஉயிரஎடுக்காமஎட்டபோ” 

எனசொல்லியபடியே  மரவேர்களில்தோதானஇடைவெளிபார்த்துசுருண்டுபடுத்துக்கொண்டார்.


மாமுனிமீண்டும்கருமாரியம்மன்கோவிலுக்குவந்தார். நாளைக்காலைவிடைகிடைத்துவிடும்என்றசின்னதொருநம்பிக்கைஅவருக்குவந்தது. மீண்டும்ஒருமின்னல்வெட்டமாமுனிகோபமடைந்தார். அண்ணாந்துவானம்பார்த்துபற்களைக்கடித்தார். பட்டெனமழைநின்றது. மேகங்கள்அவசரஅவசரமாய்கலைந்துபோயின. எங்கேயோபோய்பதுங்கிக்கொண்டிருந்தநிலவுதிடுமெனவானில்தோன்றியது. சுற்றிஎன்னநடக்கிறதுஎன்பதையேஉணராதமக்கள்மீண்டும்போய்அவரவர்இடங்களில்புதைந்துகொண்டனர்

- மேலும்

ஓரிதழ் பூ : அத்தியாயம் ஐந்து

$
0
0

இதான்நாகலிங்கப்பூ

அய்யோஎன்னவாசன! ஒருமாதிரிநெஞ்சஅடைக்குது. இந்தவாசனைக்குபாம்புவருமா?”

ஆமா. அதுவும்இல்லாமஇந்தப்பூவபாருலிங்கம்மாதிரிஇருக்கு. அதுனாலயும்இந்தப்பேர்

இதுஏன்மரத்துலபூக்குது?”

தெரில

எவ்ளோஒசரமானமரம்இல்ல

ம்அண்ணாந்துபாத்தாகழுத்துவலிக்குது

இந்தபக்கம்நிறையமுறபோயிருக்கேன். அப்பலாம்இந்தவாசனயஇரமணாசிரமத்தோடவாசனைன்னுநினைச்சிப்பேன். இன்னிக்குத்தான்தெரியுதுஇதுபூவாசம்னு

ஆசிரமத்துக்குகூடவாவாசனஇருக்கும்?”

இருக்குமேஎல்லாஇடத்துக்கும்  வாசனஇருக்கும்

எப்புடி?”

எப்படின்னுகேட்டாஎப்படிசொல்றது? உங்கவீட்டுக்குஒருவாசனஎங்கவீட்டுக்குஒருவாசனஅமுதாக்காவீட்டுக்குஒருவாசனஇப்படி

ஆமாஉன்மேலகூடஒருவாசனஇருக்கு

ஐயேநெஜமாவா

ஆமா. எங்கம்மாகோகுல்சாண்டல்பவுடர்அடிக்கும்போதுஉன்நினைவுவரும்

நீஎன்னநினைக்கவேறசெய்வியா?”

நான்நினைக்கனும்னுநினைக்கமாட்டேன்அதுவாவரும்

நான்உன்னஅடிக்கடிநினைப்பேன்

ஏன்நினைப்ப

தெரியல. நினைப்பேன்

எப்பலாம்நினைப்ப

நைட்லதூக்கம்வராதப்பநினைப்பேன்

அப்புறம்

சொன்னாசிரிக்கமாட்டியே

மாட்டேன்சொல்லு

குளிக்கறப்பநினைப்பேன்

ஐயே

ஆமாடா

ரமாமழவர்ரமாதிரிஇருக்குவாபோலாம்

ஏய்மழவர்ரமாதிரிஇருந்தாமயில்லாம்தோகவிரிச்சிஆடும்டாபாத்துட்டுபோய்டலாம்

அய்யோபயங்கரமாஇருட்டிட்டுவருது. வீட்லதேடுவாங்க

சைக்கிள்தான்இருக்கில்லவேகமாபோய்டலாம். இரு

வேணாம்ரமாவாபோலாம்

மலையைக்கருமேகங்கள்சூழ்ந்திருந்தன. மழைஉடைவதற்குமுன்பானநேரம், மேகங்கள்கணத்து, கரும்அமைதியுடன்நகர்ந்துகொண்டிருந்தன. ரமாஇரமணாசிரமம்வரைபோய்விட்டுவந்துவிடலாம்வாஎனஅழைத்தபோதுவானம்வெளிச்சமாகத்தான்இருந்தது. அரைமணிநேரத்திற்குள்எப்படிஇருட்டியதெனதெரியவில்லைரமா, கருநீலப்பாவாடையையும்பஃப்வைத்தமெருன்சட்டையும்அணிந்திருந்தாள். நான்முன்னால்நடக்கவேண்டாவெறுப்பாய்பின்தொடர்ந்தாள். சைக்கிளைஸ்டாண்ட்விலக்கிபின்னால்ரமாவைஉட்காரச்சொன்னபோதுபெரியமழைத்துளிஒன்றுஹேண்டில்பாரில்விழுந்தது. பரபரப்பாய்சைக்கிளைமிதித்தேன். அடர்த்தியானமரங்கள்சூழ்ந்தவெள்ளைக்காரர்கள்தெருவில்நுழையும்போதேமழைசடசடவெனப்பிடித்துக்கொண்டது

எங்கயாவதுநின்னுட்டுபோலாம்டா” 

என்றரமாவின்குரலைஉதாசீனப்படுத்திமிதிக்கஆரம்பித்தேன். தெருவளைவில்கருவேலந்தோப்புஅதைத்தாண்டினால்ஒரேமிதியில்வீடுதான். இருபக்கமும்முள்மரங்கள்வளர்ந்திருக்கும், நடுவில்நீண்டஒற்றைப்பாதை. மழைசுழன்றுசுழன்றுஅடித்தது. இருவரும்மொத்தமாகநனைந்துபோயிருந்தோம். ஒற்றைப்பாதைமுழுவதும்செம்மண்குழம்பலாய்மழைநீர்தேங்கியிருந்தது. இறங்கிவிடலாம்எனநினைத்தநொடியில்சைக்கிள்வழுக்கியது. நான்ஒருபுறமும் அவள் ஒருபுறமுமாய்சிதறினோம். முற்கள்இடறியதைப்பொருட்படுத்தாதுஎழுந்துரமாவைப்பார்த்தேன். எழுந்தவள்  சட்டெனமீண்டும்மடங்கிஉட்கார்ந்தாள். முகம்கோணலானது. அடிபட்ருச்சாஎன்றபடியேஅவளைநெருங்கினேன்கீழுதட்டைஅழுந்தக்கடித்துக்கொண்டே, பார்வையைத்தாழ்த்திக்கொண்டு, தலையைஇடமும்வலமுமாய்அசைத்தாள். அவள்கையைப்பலவந்தமாய்பிடித்துத்தூக்கிநிறுத்தமுயற்சித்தேன். பாதிஎழுந்தவள்இடையில்மீண்டும்உட்காரவிரும்பிஎன்கையைஉதறியவள்நிலைதடுமாறிமல்லாக்கவிழுந்தாள். கருநீலப்பாவாடைமேலேறி, தொடைகள்  நீரில்பளபளக்கஇரத்தக்குழம்பலாய்ஒருபூஅவள்கால்களின்இடுக்கில்மலர்ந்துநின்றதைஅரைநொடிக்கும்குறைவானஇடைவெளியில்பார்த்தேன். தலைகிறுகிறுக்ககீழேவிழுந்துமயக்கமானேன்.



- மேலும்

ஓரிதழ் பூ : அத்தியாயம் ஆறு

$
0
0

" " எனப்பல்லைக்காட்டியசாமியைஓங்கிமிதிக்கவேண்டும்போலிருந்தது. இருந்தகாசிற்குகுவாட்டர்தான்அடிக்கமுடிந்தது. போதைசுத்தமாய்இல்லை. அப்படியேவிட்டிருந்தால்தூங்கிப்போயிருப்பேன். எதற்குஇந்தசாமிஎன்னைஎழுப்பியது? நாளைக்காலைஎழவெடுத்தவேலைக்குவேறுபோய்த்தொலையவேண்டும். கோபத்தைசிரமப்பட்டுக்கட்டுப்படுத்திக்கொண்டு 

என்னசாமி?” என்றேன்கடுகடுப்பாய்

யப்பாவாத்திஉன்னஎங்கலாம்தேடுறது? உன்கிட்டஏதோவெளக்கம்கேட்கணும்னுநேத்துலருந்துஇவருஎம்பின்னாடிசுத்துராரு“ 

என்றபடிஇன்னொருசாமியாரைக்காண்பித்தார். ஆத்திரம்ஆத்திரமாய்வந்தது.

"என்னாவிளக்கம்?"

மாமுனி தொண்டையைக்கனைத்துக்கொண்டு

ஐயாஓரிதழ்பூஎன்றால்என்ன? அதுஎங்குகிடைக்கும்என்பதைஅறியவந்தேன். தாங்கள்அறிவீர்களாமே?”

ங்கொம்மாபாவாடயதூக்கிட்டுபாருஇருக்கும்”  இரைந்தேன்.

அவர்ஒருநொடிசினந்தார். பின்யோசித்தார். மெதுவாய்வாய்திறந்து

நான்தான்அகத்தியமாமுனி. நீங்கள்போகராகஇருக்கவேண்டும். தெளிவடைந்தேன். நன்றிவருகிறேன்” 

எனசொல்லிவிட்டுவிடுவிடுவெனநடையைக்கட்டினார்.

சாமிக்குசிரிப்பைஅடக்கமுடியவில்லை.

சாமிநானேபோதைபத்தலன்னுகடுப்புலகிறேன். நீவேறஏன்கண்டகெரகத்தையும்இழுத்தாந்துகடுப்பேத்துற

சரிசரிகோச்சுக்காத, கைலஆப்இருக்கு, வாஅந்தாண்டமரத்துக்காபோய்உட்கார்ந்துசாப்புடலாம்

சட்டெனஉற்சாகமானேன். “சாமிநீதெய்வம்சாமி

வாடாடேய்வாடா

சமுத்திரஏரிக்கரை. காற்றுஜிலுஜிலுவெனவீசிக்கொண்டிருந்தது. நான்இங்கிருப்பதைஇந்தசாமிஎப்படிக்கண்டுபிடித்தார்எனயோசித்துக்கொண்டேஅவரோடுநடந்தேன். நுணாமரத்தடியில்போய்அமர்ந்தோம்சாமிவேட்டிஇடுப்பிலிருந்துஅரைபுட்டியைஎடுத்தார். கூடவேஒருவாட்டர்பாக்கெட்டும்இரண்டுநடுங்கியப்ளாஸ்டிக்டம்ளரும்இருந்தது.

அடஒருபாரையேஉள்ளவச்சிருக்கியே

ம்க்கும்என்றபடியேமுக்கால்டம்ளர்ரம்ஊற்றிகொஞ்சூண்டுவாட்டரைநுரைவரஅடித்தார்.

ஆசையாய்எடுத்துஇழுத்தேன்.

சாமிமெதுவாகுடிமெதுவாகுடிஎன்றபடிதன்டம்ளரில்கால்வாசியை  வாயில்சரித்துக்கொண்டார்.

அந்தாளுஅகத்தியமாமுனி,போகருன்னுஎன்னவோஒளறினானேஎன்னவாஇருக்கும்?”

சிலதுங்கஇப்படிஆய்டும். நேத்துநைட்அந்தாளபாத்தப்பவேநினைச்சேன். லேசாகழண்டிருக்கும்னு. ஆனாநீஅப்படிதிட்டியிருக்கவேணாம்எனசிரிப்பாய்சொன்னார்

மனுசனுக்குகடுப்பாவுமாஆவாதா? நியாயப்படிஉன்னதான்திட்டிஇருக்கனும். சரக்குஎட்தாந்துதப்பிச்சிட்ட

நான்அவரக்கூட்டியாந்ததுக்குகாரணம்இருக்கு

என்னகாரணம்?”

சாமிமீதமிருந்ததையும்இழுத்துவிட்டுசொன்னார்

ஒலகம்முழுக்கபைத்திகாரப்பசங்கநிறையபேர்இருக்காங்க. இதுலபாதிபேர்தன்னவேணும்னேபைத்தியம்னுநினைச்சிக்கிறாங்க. அதுலநீயும்ஒருத்தன்

நான்நேத்துசொன்னதநீநம்பலயா

அடப்போடாசாமானம்சாமானம்தான்அதிலஎங்கவருதுபூ

சாமிஉனக்குபுரியாதுவுட்ரு

என்னாபுரியாது

எதுவும்புரியாதுவுட்ரு

சாமிக்குகுரல்உயர்ந்தது. கண்கள்விரியக்கிட்டத்தட்டகத்தினார்

டேய்நான்சாமிடா, சும்மாரோட்லஅலையுறபிச்சகாரன்னுநினைச்சிக்காத. ங்கோத்தோசாமானம்மட்டும்பூவுமாதிரிஇருந்தாபோதுமா? ஒடம்புமுழுக்கபூவாபூத்தபொண்ணநீயோசிச்சாச்சிம்பாத்துகிறியாநான்கூடவேபடுத்துகிறேன்

திகைப்பாய்பார்த்தேன்.சாமிதொடர்ந்தார்

”எந்தப்பூன்னுசொல்றதுஅவள? அதுவரைக்கும்கல்யாணஆசையேஇல்லாதவனசொழட்டிஒருஅடிஅடிச்சபொண்ணுஅவ... நாபத்துவயசிலயேஒருஜோசியக்காரருக்குஎடுபிடிவேலைக்குபோய்ட்டேன்... மூங்கில்தொறபட்டுஜோசியக்காரர்னுகேள்விபட்டிருப்ப... நல்லமனுசன்... சொன்னாசொன்னதுதான்... வாக்குசுத்தம். ரொம்பபெரியபெரியஆளுங்கலாம்அவருமுன்னாடிகைகட்டிகுனிஞ்சிஆசிர்வாதம்வாங்கிட்டுபோவாங்க. அவரும்உள்ளதஉள்ளபடியேசொல்வாரு. நடக்கும்னாநடக்கும்.நடக்காதுன்னாநடக்காது. என்இருபத்தைஞ்சி வயசுவரைக்கும்அவரோடதான்இருந்தேன். ஊத்தாமழஊத்திட்டிருந்தஒருகார்த்திகமாசம்தீபத்தன்னிக்குகாலைலஒருபொண்ணகூட்டிகினுவயசானவர்ஒருத்தர்வந்தார். நான்அன்னிக்குகிட்டத்தட்டஅந்தபொண்ணுமொகத்திலதான்முழிச்சேன். பார்த்தஒருநொடிசகலமும்ஆடிப்போச்சி. என்னோடவயசு, வாலிபம்எல்லாமேஅந்தபொண்ணபார்த்தஒடனேமுழுச்சிகிச்சிஅப்படியேஅந்தபொண்ணதூக்கிட்டுஎங்கயாவதுஓடிடனும்னுஒருவெறிவந்துச்சி. இப்பயோசிச்சிபாத்தாலும்அந்தநாள்அந்தநிமிசம்எதுக்காகஅப்படிதோணுச்சின்னுதெரியல... அந்தபொண்ணுக்குஏதோதோஷம். கல்யாணம்தள்ளிதள்ளிபோச்சி. பரிகாரத்துக்காகஜோசியர்கிட்டவந்தாங்க. ஜோசியர்அந்தபொண்ணுமூஞ்சமட்டும்தான்பாத்தாருஎதுவுமேசொல்லாமஉள்ளவந்துட்டுஎங்கிட்டஅவங்களபோவசொல்லிடுன்னுட்டாரு. அவருகிட்டஇருந்தபதினஞ்சி வருஷத்திலஒருவாட்டிகூடஅவர்யாரையும்அப்படிசொன்னதில்ல. எனக்குகொஞ்சம்ஆச்சரியமாபோச்சி. வெளிலவந்துஅவங்கவீட்டுஅட்ரஸ்வாங்கிட்டுஅனுப்பிட்டேன். ரெண்டுநாள்முழுக்கஅந்தபொண்ணுமூஞ்சேஎல்லாநேரமும்கண்ணுமுன்னாலநின்னுச்சி. சரியாமூணாவதுநாள்காலைலஜோசியர்கொஞ்சம்பணத்தைகைலகொடுத்துபோய்டுன்னுசொல்லிட்டுதிரும்பிப்பாக்காமஉள்ளாறபோய்ட்டார். எனக்குடக்னுஒண்ணும்புரியல. ஆனாஎன்னவோநம்மளசுத்திநடக்குதுன்னுமட்டும்உள்மனசுசொல்லிச்சி.நான்எதபத்தியும்யோசிக்கல. அந்தபொண்ணோடஊர்தேவபாண்டலம்.சங்கராவரம்கிட்ட. பஸ்ஏறிகாலைலபத்துமணிக்கெல்லாம்அவங்கவீட்டகண்டுபிடிச்சிட்டுபோய்ட்டேன்.
ஒருசின்னதெருவிலகடேசிவீடு. கதவுதெறந்தேதான்இருந்திச்சி. பெரியவரேன்னுசொல்லிட்டேஉள்ளபோனேன். அந்தபொண்ணுகுத்துக்கால்வச்சிதரைலஉட்கார்ந்துட்டுதலவாரிட்டுஇருந்திச்சி. என்னநிமிந்துஒருபார்வபாத்துச்சி. அதுபார்வைலஆச்சரியமேஇல்ல. நான்வந்தேதீருவன்னுஅதுவும்நெனச்சிருக்கும்போல. நான்பேசாமநின்னேன்
சாப்புட்ரிங்களான்னுகேட்டுச்சி. உம்ம்னுதலையஆட்டினேன். உள்ளாறபோய்தட்டுநெறயபழையதபோட்டுவழியவழியமோர்ஊத்திஎடுத்தாந்துகைலகொடுத்திச்சி. என்கண்ணுமுழுக்கஅவமேலநிலகுத்திநின்னுடுச்சி. ஒருவார்த்தகூடபேசாமசோத்தஅள்ளிஅள்ளிசாப்டேன். அவஅன்னிக்கு  நெருப்புகலர்லபுடவகட்டிஇருந்தா. அவநின்னுட்டிருந்ததோற்றம்ஒருதீப்பிழம்புஎரியுறமாதிரிதான்இருந்தது. சாப்பிட்டுமுடிச்சேன். அவமெல்லநடந்துபோய்வாசல்கதவசாத்தினா. அதுவரைக்கும்உள்ளபொங்கிட்டிருந்தஏதோஒண்ணுவெடிச்சது. பாய்ஞ்சிபோய்அவளஅணைச்சிகிட்டேன். அய்யோஅவதீப்பிழம்புமட்டும்இல்லதீயாபூத்தபூவுந்தான். உடம்புமுழுக்கநெருப்புபூபூத்தமாதிரிஇருந்தது. ஒருபைத்தியக்காரன்மாதிரிஅவகூடகலந்தேன். அவளஎன்னென்னவோபண்ணேன். கசக்கிபிழிஞ்சிகடிச்சிநக்கிஅய்யோஇப்பநெனச்சாலும்ஒடம்புபுல்லரிக்கிது. ஆனாஅவ்ளோஆட்டத்துக்குபின்னாடியும்அவகொஞ்சம்கூடகசங்காமஅதேநெருப்புபூமாதிரிதான்இருந்தா. ஆனாகண்லஒருபெரியஅமைதிஇருந்திச்சி. அதுக்கப்புறம்அந்தஅமைதியஅவகூடவாழ்ந்தரெண்டுவருஷத்துலஒருநாள்கூடநான்பாக்கல...”

சாமிபேச்சைநிறுத்தினார். மழைபெய்துஓய்ந்ததைப்போன்றஅமைதி. வியர்த்திருந்ததர். இன்னொருபக்கஇடுப்புவேட்டிமடிப்பிலிருந்துஒருபொட்டலத்தைவெளியில்எடுத்தார். சதுரமாய்மடிக்கப்பட்டதாள்அவர்சட்டைப்பையில்இருந்தது. நிதானமாய்புகையைத்தயாரித்துஉள்ளிழுத்தார். புகைதீர்ந்தபின்மெல்லஎழுந்துபோய்நிழல்விரித்துக்கிடந்தஆலமரத்தடியில்துண்டைவிரித்துப்படுத்துக்கொண்டார்


மேலும்

புகைப்படம்: பினு பாஸ்கர்

ஓரிதழ் பூ : அத்தியாயம் ஏழு

$
0
0

 அகத்தியமாமுனிஸ்கந்தாசிரமபாறைக்கடியில்உட்கார்ந்திருந்தார். பாறையைஒட்டிவளர்ந்திருந்தமஞ்சம்புல்அவரைமுழுமையாய்மறைத்திருந்தது. இரண்டுஇரவையும்மூன்றுபகல்களையும்கடந்தும்அசையாமல்உறைந்துகிடந்தார். ஓரிதழ்பூஓரிதழ்பூஎனஉதடுசதாமுணுமுணுத்துக்கொண்டிருந்தது. வாத்திஎனஅழைக்கப்பட்ட  நபர்போகர்தான்என்பதைஆழமாகநம்பினார். அவரால்மட்டுமேஇப்படிபட்டுத்தெறிக்கும்படியானஅறிதலைதந்துவிடமுடியும். இத்தனைவருடஅலைவிற்குப்பிறகுநிகழ்ந்ததிறப்பிது. அடேயப்பா! அகத்தியமாமுனிஅந்தத்திறப்புநிகழந்தநொடியைநினைத்துநினைத்துமருகினார். மாலைஆகாயம்தன்வண்ணங்களில்தளும்பிக்கொண்டிருந்தது. வெளிச்சம்மங்கிவருவதைஉணர்ந்தவர்எழுந்தார். தன்னுடையஅத்தனைஅறிதலையும்சக்திகளையும்ஞானத்தையும்கையிலிருந்தசிறுகமண்டலத்தில்அடைத்துஎறிந்துவிடமுடிவுசெய்தார். அங்கனமேஅகத்தியமாமுனியின்சர்வமும்கமண்டலத்திற்குள்போனதுஅருகிலிருந்தபாறைஉச்சிக்குப்போய்கமண்டலத்தைகீழேஎறிந்தார். யுகங்கள்கழிந்துமுதன்முறையாகப்பசியைஉணர்ந்தார். அவரதுஒடிசல்உடம்பில்சோர்வுதிடுமெனமண்டியது. தளர்ந்துபோய்பாறையின்மீதிருந்துகீழிறங்கினார். அவர்கால்களைஏதோஇடறதடுமாறிவிழப்போய்நின்றார்குனிந்துபார்த்தால்அவரதுகமண்டலம். மாமுனிவெளிறினார். ஐயகோஇதுஎன்னைவிடாதுபோலிருக்கிறதேஎனபுலம்பியபடியேவிரைந்துநடக்கஆரம்பித்தார். இருள்முழுமையாகமண்டியது. மலைச்சரிவைநோக்கிஓடஆரம்பித்தார். கமண்டலம்மென்சப்தத்தோடுஅவரைத்தொடர்ந்தது. பாதையில்இடறும்சிறுபாறைகளின்மீதேறிகுதித்தும்விரைந்தும்மாமுனிகீழேஇறங்கிக்கொண்டிருந்தார். கமண்டலம்உருளும்ஓசைஅந்தமுன்னிரவில்மிகத்துல்லியமாய்அவர்காதில்விழுந்துகொண்டேஇருந்தது. அவர்அந்தஓசையிலிருந்துதப்பிக்கவிரும்பினார். பறந்தேபழகியஅவர்உடல்ஓடஅனுமதிக்கவில்லை. செங்குத்தானசரிவைவந்தடைந்தபோதுஅவர்உடல்ஒத்துழைக்கமறுத்தது. சறுக்கிவிழுந்தார். கமண்டலம்உருளும்ஓசைஅவர்காதில்விழவில்லை. நினைவைஇழந்திருந்தார்.
0


ஹெலிகாப்டர்கள்நிற்பதற்காகபோடப்பட்டசிமெண்ட்திட்டில்சம்மணமிட்டுசாமிஉட்கார்ந்திருந்தார். நான்நடந்துகொண்டேசிகரெட்புகைத்துக்கொண்டிருந்தேன். ராஜீவ்காந்தியின்ஹெலிகாப்டர்இங்குநின்றிருக்கிறது. ஜெயலலிதாவந்திறங்கியஹெலிகாப்டர்நின்றஇடம்வேறு. அருகாமையில்அரசுகலைக்கல்லூரிஹாஸ்டலும்சற்றுத்தொலைவில்கல்லூரிக்கட்டிடமும்நிலவொளியில்மெளனமாய்நின்றுகொண்டிருந்தன. வேனிற்காலநிலவுதன்அகலக்கண்விரித்துபூமியின்சகலஇடுக்கையும்உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தது. சாமிகைகளைப்பின்னேஊன்றிஅண்ணாந்துவானத்தைப்பார்க்கஆரம்பித்தார். நட்சத்திரங்கள்இறைந்துகிடந்தமுன்னிரவுவானம். புகைத்துமுடித்துவிட்டுஅவருக்குஎதிரில்போய்அமர்ந்துகொண்டேன். இருவரும்எதுவும்பேசிக்கொள்ளவில்லை.

இன்றுகாலைநீண்டவிடுமுறைக்குப்பிறகுபள்ளிக்கூடம்போனேன். நான்கரைமணிவரைநெருப்புமேல்நின்றுவிட்டுபெல்அடித்ததும்முதல்ஆளாய்வெளியேவந்துரன்னிங்கில்இருந்ததிருவண்ணமலைபஸ்ஸைப்பிடித்துபஸ்ஸ்டாண்ட்வந்தேன். வழக்கமாகப்போகும்பாருக்காய்நடந்துகொண்டிருந்தபோதுசின்னகடைத்தெருவில்சாமிஎதிரில்வந்தார்

வாத்திவாஉன்னபாக்கதான்வந்தேன் வாபோலாம்” 

எனகலைக்கல்லூரிமைதானத்திற்குஅழைத்துவந்தார். நான்பதில்எதுவும்பேசவில்லை. அவர்பின்னாலேயேநடந்துவந்தேன். ஒருமணிநேரம்ஆகியிருக்கும்ஒன்றுமேபேசிக்கொள்ளாமல்உட்கார்ந்தும்நடந்துமாய்மெல்லச்சூழ்ந்தஇருளைநிலவைநட்சத்திரங்களைப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்இன்னும்பத்துநிமிடங்கள்கழிந்திருக்கும். என்முதுகிற்குப்பின்னால்கொலுசொலியும்புடவைசரசரப்பையும்செருப்புசப்தத்தையும்கேட்கமுடிந்தது. சப்தம்நின்றதும்மெல்லமுகம்உயர்த்திப்பார்த்தேன். அகலப்பொட்டுவைத்தஒருபெண்மணிநின்றுகொண்டிருந்தார். அருகில்ஒருசிறுமி. சாமிதொண்டையைக்கனைத்துக்கொண்டுஉக்காருங்கஎன்றார்

எதுவும்பேசாமல்அந்தப்பெண்மணியும்சிறுமியும்அமர்ந்தனர். நான்இருவரையும்பார்க்கசங்கோஜப்பட்டேன்ஒருவழியாய்அவரைப்பார்த்துபுன்னகைத்தேன். அந்தப்பெண்மணிஎன்னைஆழமாய்பார்த்தார்போலிருந்தது. நாற்பத்தைந்துவயதிருக்கலாம். மாநிறம். கனத்தசாரீரம். அமானுஷ்யபுதிர்முகம். முகத்தைமீண்டும்மீண்டும்பார்க்கவேண்டும் போலிருந்தது. ஒருவேளைஅந்தஅகலச்சிவப்புப்பொட்டுகாரணமாய்இருக்கலாம். அவ்வளவுபெரியபொட்டுவைத்தயாரையும்அதுநாள்வரைநான்பார்த்திருக்கவில்லை. சிறுமிக்குபத்துவயதிருக்கும். பாவடைசட்டைஅணிந்திருந்தாள். கனத்திருந்தமெளனத்தைஉடைத்துக்கொண்டு

”என்னக்ளாஸ்படிக்கிறபாப்பா”என்றேன்

”அஞ்சாவது”

“எங்கபடிக்கிற”

”தேனிமலைஸ்கூல்ல”

அப்போதுதான்சாமிகேட்டார்

“நீஎந்தபள்ளிகோடத்துலயாஇருக்க?”

”கீழ்பெண்ணாத்தூர்ஹைஸ்கூல்”

”தெனம்போய்ட்டுவந்துர்ரயா”

”ஆமா”

மீண்டும்மெளனமானோம்

இப்போதுதான்கவனித்தேன். அந்தப்பெண்மணிகையோடுஒருஒயர்கூடையைஎடுத்துவந்திருந்தார். அதில்ஒருசாப்பாட்டுக்கேரியர்இருந்தது. ஒருவார்த்தைகூடபேசாமல்கேரியரைதிறந்துடிபன்பாக்ஸின்மூடிகளைத்திறந்தார். மீன்வாசனைஇதமாய்பரவியது. ஒருபாக்ஸில்பொரித்தமீன்கள்இருந்தனஅதைஎங்கள்முன்வைத்தார். சாமிஇடுப்பிலிருந்துஒருகுவாட்டர்பாட்டிலைஉருவினார். ஒயர்கூடையில்இரண்டுஎவர்சில்வர்டம்ளர்களும்தண்ணீர்பாட்டிலும்இருந்தன. அந்தப்பெண்மணியேஎல்லாவற்றையும்வெளியில்எடுத்துவைத்தார். எனக்குவேணாம்சாமிஎனமறுத்தேன். அவர்சட்டைசெய்யாமல்குவாட்டரைஇரண்டாய்டம்ளரில்ஊற்றினார். லேசாகதண்ணீர்ஊற்றிகையில்எடுத்துக்கொடுத்தார்.



பெண்கள்முன்னால்குடித்ததில்லை. மீண்டும்மறுக்கவாயெடுத்தேன். குடிஎன்றகுரல்அழுத்தமாய்கேட்டது. சற்றுத்திகைத்துஅப்பெண்மணிக்காய்திரும்பினேன். பரவால்லகுடிஎன்றார். வெண்கலக்குரல். லேசாகத்தடுமாறிப்போய்ஒரேமூச்சில்இழுத்துவிட்டுமுன்னேவைக்கப்பட்டிருந்தஒருமீன்துண்டைஎடுத்துவாயில்போட்டுக்கொண்டேன். சாமிநிதானமாககுடித்தார். இரண்டுதட்டுகளைமுன்னால்வைத்துசாதம்போட்டார். கிண்ணத்திலிருந்துமீன்குழம்புஊற்றினார். நல்லவாசனை. நல்லபசி. அவசரஅவசரமாய்அள்ளிப்போட்டுக்கொண்டேன்.  

அந்தப்பெண்மணிஒருகாலைமடித்தும்ஒருகாலைஊன்றியும்அமர்ந்திருந்தார். நிலவுஅவரின்தலைக்குப்பின்னேஒளிர்ந்துகொண்டிருந்தது. என்கூச்சம்குறைந்துஅவர்முகத்தைப்பார்த்தேன். அணிந்திருந்தமூக்குத்திநிலாவெளிச்சத்தில்பளீரிட்டது. கருத்தமுகத்தில்வட்டப்பொட்டும்ஒளிர்விடும்மூக்குத்தியும்உயர்ந்தஆகிருதியும்எனக்குள்மெல்லியநடுக்கத்தைஏற்படுத்தியது. இருந்தாலும்அவரைப்பார்த்துக்கொண்டேயிருந்தேன். கருமாரியம்மனைப்போலிருப்பதாகப்பட்டது.. மெல்லஎன்னவென்றுதெரியாதபயம்அடிவயிற்றைக்கவ்வியது. ஒருவேளைஇதெல்லாமேமாயமோ? இந்தசாமிசிவனோ? இந்தஅம்மாஅம்மனோ?... என்னோடுவிளையாடிப்பார்க்கிறார்களோ?.. பயம்இப்போதுவயிற்றிலிருந்துபந்தாய்சுருண்டுமேலெழுந்தது.. இன்னும்கொஞ்சம்போட்டுக்கோஎன்றவாறேஅந்தஅம்மாசாமியைப்பார்த்துசொன்னபோதுஅவரின்பெரியகண்கள்மினுங்கின. குரல்கோவில்மணியைப்போலிருந்தது. அந்தபயப்பந்துஇப்போதுதொண்டைக்குவந்துவிட்டது. உடல்நடுங்கஎழுந்தேன். என்னைச்சுற்றிஎன்னவோநடக்கிறதுஎன்பதைப்புரிந்துகொண்டேன். ஒருகணம்கூடதாமதிக்கவில்லை. என்வீடிருக்கும்திசையைப்பார்த்துஓடஆரம்பித்தேன்.

- மேலும் 

காட்சிகளின்றி காணுதல் - SPOTLIGHT 2015

$
0
0

திரைப்படம் அடிப்படையில் ஒரு காட்சி ஊடகம். அதற்கு உரையாடல்கள் பலமே தவிர அவசியம் கிடையாது என்பது ஒரு பொதுவான கருத்து. தமிழ் சினிமா பார்வையாளர்களாகிய நாம், அதுவும் செவி கிழிய - பக்கம் பக்கமாக வசனங்களையும், பஞ்ச் டைலாக்குகளையும் கேட்டு நசிந்து போன நாம், சினிமாவை காட்சி ஊடகம் தானென உடனடியாக ஒப்புக் கொள்வோம். உலகத்திலேயே சினிமாவை ரேடியோவில் பார்த்த மகத்தான பார்வையாளர்களும் நாமென்பதால் திரும்பத் திரும்ப இந்தக் காட்சி ஊடகம் என்கிற சொல், எல்லா தரப்பு சினிமா விமர்சகர்களாலும் முன் வைக்கப்படுகிறது. ஆனால் சினிமா காட்சி ஊடகம் மட்டுமே அல்ல என்பதையும் சில திரைப்படங்கள் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றன. 

மிகச் சரியான உரையாடல்கள் மூலம், ஒரே ஒரு காட்சிப் பதிவு கூட இல்லாமல் சொல்ல வந்த விஷயத்தை ஆழமாகக் கடத்தி விட முடியும்  என்பதற்கான உதாரணப் படங்களும் ஏராளம் உண்டு. ஹிட்சாக்கின் ரோப் பிலிருந்து தொடங்கி டாம் மெக்ராத்தியின் சமீபத்திய படமான ஸ்பாட்லைட் வரை இந்தக் காட்சிகளற்ற காட்சிப் படங்கள் திரையின் வேறொரு சாத்தியத்தை முன் வைக்கின்றன.

ஸ்பாட் லைட் திரைப்படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவானது. பாஸ்டன் குளோப் பத்திரிக்கையில் வேலை பார்த்த- குறிப்பாக மார்ட்டி என்பவர் 2001 ஆம் வருடம் பாஸ்டன் குளோப் பத்திரிக்கையின் எடிட்டராக சேர்ந்த பிறகு – ஸ்பாட் லைட் குழுவினரான ராபி, ரெஸண்டஸ், சாஷா, பென் ஆகியோர் துப்பறிந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ஒரு மிகச் சிக்கலான நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்தான் இது. கதாபாத்திரங்களின் பெயரைக் கூட மாற்றிப் போடாது, எவ்வித பின் விளைவுகள் குறித்தும் பயப்படாமல் உருவாகியிருக்கும் மிக நேர்மையான படமிது. 

பாஸ்டனைச் சேர்ந்த கத்தோலிக்கப் பாதிரிமார்கள் தங்களின் கடவுள் பிம்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அறியாச் சிறார்களைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆரம்பத்திலேயே பத்திரிக்கையின் கவனத்திற்கு இச் செய்தி வந்திருந்தாலும் ஏதோ ஒன்று இரண்டு அல்லது தப்பிப் போன ஒன்று என்பதாய் பத்திரிக்கைக் குழுவினரால் கை விடப்படுகிறது. மெட்ரோ பகுதியில் பெட்டி நியூஸாய் வந்திருக்கும். பின்பு மார்ட்டியின் வருகைக்குப் பிறகு ஸ்பாட்லைட் குழுவினரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. தொடர் விசாரணைகளின் மூலம் இந்தச் சம்பவத்தின் பூதாகரம் மெல்ல வெளிப்பட ஆரம்பிக்கிறது. சிறு வயதில் பாதிரியார்களால் பாதிக்கப்பட்ட சிலர் ஒரு குழுவாய் இணைந்து, இந்த குரூரத்தை உலகிற்கு வெளிப்படுத்த முனைகின்றனர். நீதியிடம் செல்கின்றனர். ஆனால் அதிகாரம் மிக்க  கத்தோலிக்கத் தேவாலயங்கள் இவ்விஷயங்களை வெளியே கசிய விடாது, திறமையான வக்கீல்கள் மூலம் சமன்படுத்தி விடுகின்றன.

ஸ்பாட்லைட் குழுவினரின் ஆத்மார்த்தமான மற்றும் தீவிரமான உழைப்பின் மூலம் இது ஏதோ ஓரிரண்டு பாதிரிமார்களின் பிசகு இல்லை ஒட்டு மொத்த பாதிரியார்களில் ( பாஸ்டனில் மட்டும் 1500 பாதிரியார்கள்)  6 சதவிகிதம் பேர் ஃபீடோபில் ஆக இருப்பது கண்டறியப்படுகிறது. யூதரான மார்ட்டி ஆரம்பத்திலேயே சொல்வது போல குற்றம் இழைத்த தனிப்பட்ட பாதிரிமார்களை தண்டிக்காமல் அமைப்பை சரி செய்வதை இந்தக் குழு நோக்கமாகக் கொண்டு அதில் வெற்றியும் அடைகிறது.

இறை நம்பிக்கைக் கொண்ட, சிறு வயதுக் குழந்தைகளை வைத்திருக்கும் நம் மிடில் க்ளாஸ் மனதை பதற்றப் படுத்தக் கூடிய, மிக உணர்ச்சிப் பூர்வமான மையக் கதை இது. இந்தப் பதற்றத்தை விளக்குவது போன்றோ அல்லது சுட்டிக் காட்டுகின்ற நேரடியான காட்சிகளோ இப்படத்தில் இல்லை என்பதுதான் இதன் விசேஷம். ஓர் ஓரினச் சேர்க்கையாளர் தான் பாதிக்கப்பட்டதைச் சொல்கையில் உடைந்து அழுவதும், வெளிவரும் உண்மைகளின் அழுத்தம் தாங்காது குழுவில் ஒருவரான ரெஸிண்டஸ் ஓரிரு காட்சிகளில் உணர்ச்சியவயப்படுவதைத் தவிர வேறந்த காட்சிப் பூர்வமான பதிவும் கிடையாது.

முதற் பத்தியில் சொன்னதைப் போல இத்திரைக்கதை அடர்த்தியான உரையாடல்களால் நெய்யப்பட்டிருக்கிறது. அந்த உரையாடல் நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் நாம் காட்சியாகக் காண முடிந்தால் எழும் அதிர்வுகளுக்கு எவ்விதத்திலும் குறையாமல் இருக்கிறது.

பத்து வருடங்களுக்கு முன்பு இணையத்தில் சும்மா எழுதிப் பார்த்த காலகட்டங்களில் பத்திரிக்கைத் துறை மீது எனக்கு பெரும் விருப்பம் இருந்தது. தோளில் ஒரு ஜோல்னாப் பையை மாட்டிக் கொண்டு, வீதி வீதியாக மக்களைச் சந்தித்து, அவர்களின் பாடு களை எழுதிப் பார்க்க வேண்டும் என்கிற பகற் கனவுகளும் இருந்தன. ஆனால் அடுத்த மூன்று வருடத்தில் தமிழ் நாட்டில் நியூஸ் மீடியா வேறொரு இடத்திற்கு நகர்ந்தது. மஞ்சள் பத்திரிக்கை என்று தனியாக வருவது நின்று போய் தமிழில் வெளியாகும் எல்லாமும் மஞ்சள் நிறத்தை வந்தடைந்தன. சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப மீடியாக்கள் நிறங்களை மாற்றிக் கொண்டே இருப்பதையும் காண முடிந்தது. பின்பு அந்த எண்ணம் அடியோடு காணாமல் போனது. ஸ்பாட்லைட் பார்த்த இரவில் பத்திரிக்கைத் துறை மீதான என் பழைய கிலேசம் மெல்ல எட்டிப் பார்த்தது. பத்து வருடங்களிற்கு முன்பு எல்லாம் சரியாகத்தான் இருந்தது என நினைத்துக் கொண்டேன்.

0

மதம், நீதியின் மீது செலுத்தும் அதிகாரம் குறித்தும் இத்திரைப்படம் வெளிப்படையாகப் பேசுகிறது. அதுவும் பெரும்பான்மைச் சமூத்தினரின் மதம் என்பதால் அதன் அதிகார நீட்சி எல்லா எல்லைக்கும் ஏற்கனவே நீண்டிருக்கிறது. இந்த குரூரத்தை வெளியே கொண்டு வந்தே ஆக வேண்டுமென்கிற பத்திரிக்கையாளர்களின் அர்ப்பணிப்பும், அதிகார மட்டத்திற்கு ஏற்படும் நொடிநேர மனிதத் தன்மையுமே  இந்தக் குற்றவாளிகளை அடையாளம் காண உதவுகின்றன. சிறார் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 87 கத்தோலிக்க பாதிரியார்களின் பெயர்களை பாஸ்டன் குளோப் பத்திரிக்கை உலகிற்கு அறிவிக்கிறது. அறிவித்த நொடி முதல் ஏராளமான பாதிக்கப் பட்டோரின் அழைப்புகள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றன.
படம் முடிந்த பிறகு காண்பிக்கப்படும் கண்டறியப்பட்ட பீடோபில் பாதிரியார்களின் புள்ளி விவரங்கள் இன்னும் அதிக கசப்பை நமக்குள் ஏற்படுத்துகிறது. இந்த குரூரத்திற்கு முடிவு இன்னும் வந்துவிடவில்லை என்பதை படத்தின் துவக்கக் காட்சியும், விஷயம் வெளிப்பட்டுவிட்டது என்கிற வெற்றிச் செய்தித்தாளோடு ரெஸிண்டஸ்  கரிபீடியனை சந்திக்கும் போது அவர் இன்னொரு பாதிக்கப்பட்ட சிறுமியை பார்த்துக் கொண்டிருப்பார். அது இக்குரூரத்தின் முடிவின்மையை மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கும்.


ஒரு காட்சியில் ரெஸண்டஸ் தனக்கு மிக முக்கியமான தகவல்களைத் தந்த கரிபீடியனோடு உரையாடிக் கொண்டிருப்பார். அவர் இந்த வேலை மிக முக்கியமானது அதற்காகத் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை எனச் சொல்லுவார். கரிபீடியன் ஒரு ஆர்மீனியன், ரெஸண்டஸ் ஒரு போர்த்து கீசியர், இந்த முயற்சியை ஆரம்பித்து வைத்த மார்ட்டி ஒரு யூதர். இவர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள் என சொல்லிக்கொள்ளும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருப்பார்கள்.  அமெரிக்கா என்பதே வந்தேறிகளின் நாடுதான் என்றாலும் எதன் அடிப்படையில் அனைவரையும் இந்த மதம் ஒன்றாய் உணரச் செய்கிறது.? எப்படி ஒரே கடவுள் இவர்கள் அனைவருக்குமான கடவுளாக இருக்க முடியும் என்பதெல்லாம் விரிவாக யோசிக்க/ பேசப்பட வேண்டிய விஷயம்தான்.

கூடு திரும்புதல்

$
0
0
இந்த வலைப்பக்கத்தை எட்டிப் பார்த்து மாதங்களாகின்றன. எழுதியோ,வருடமாகிறது. ஃபேஸ்புக் யுகத்தில் போய் என்ன ப்லாக்ஸ்பாட் ! என்கிற அலுப்பு மட்டுமே இந்தப் பக்கத்தில் எழுதாமல் விட்டதற்கான காரணமாய் இருக்க முடியாது. எழுதி என்ன ஆக? அல்லது எழுத என்ன இருக்கிறது? என்கிற விட்டேத்தி மனநிலைதாம் முக்கியக் காரணம்

ஒரேயடியாய் சேர்ந்து கொண்ட சினிமாப் பித்தும், இலக்கிய அடையாளமாகவிருந்த மனதிற்குப் பிடித்த சில முகங்களின் பரிதாபகரமான காரிய வெளிறல்களும் எழுத்தின் மீதான வாஞ்சையை சற்றல்ல, நிறையவே குறைத்திருக்கின்றன. இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் எல்லாத் துறையிலேயும் நிகழும் தேய்மானம் தான் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

இதையெல்லாமா எழுதுவது? என்கிற கூச்சமும் சென்ற சில வருடங்களில் என்னிடம் அடையாய் அப்பியிருந்தது. ஃபேஸ்புக்கில் நெகிழ்ந்த சில வியாழன் இரவுகளில் மட்டும் எதையாவது கிறுக்கி வைக்கப் போய்,பின்பு அதுவே வழக்கமானது. சில நெருங்கிய நண்பர்கள் இதைப் புரிந்து கொண்டு என் குறிப்பைப் பார்த்து நாளை நினைவு கொள்வதாய் கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அவசரமாய் விழித்துக் கொண்டு வியாழன் இரவுக் குறிப்புகளை நிறுத்தினேன்.

 முன்பு எப்போதுமே இல்லாத அசாத்திய அமைதி இப்போது வாய்த்திருக்கிறது. மேலும் நிதானப்பட்டிருக்கிறேன். மனதின் பைத்திய நிழல்களையெல்லாம் துரத்தி அடித்தாயிற்று. சிறுமை, மனநோவு, கோபம், பற்றாக்குறை, பேராசை என எதுவுமில்லை. முழுமையாய் மகிழ்ச்சியோடிருந்தல் என்பது இப்போதுதான் சாத்தியப்பட்டிருக்கிறது. மற்றவர்களின் பிழைகளையும் என்னுடைய பிழைகளையும் முழுமையாய் மறந்துவிட்டு ஒவ்வொரு நாளையும் புத்தம் புதிதாய் எதிர் கொள்கிறேன். நோய்மையுற்றிருந்த உடல், மனம் இரண்டும் வலுப் பெற்றிருக்கிறது.

 எழுத மட்டுமே விரும்புபவன் எங்கே போவேன்? எங்கெங்கோ சுற்றி விட்டு மீண்டும் கூட்டிற்கே வருகிறேன். எழுத்தே என்னைச் சேர்த்துக் கொள்.

நாய் அடிக்கிற கோல்

$
0
0

நேஷ்னல் புக் ட்ரஸ்ட் 1995 இல் வெளியிட்டிருந்த கன்னடச் சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு இதே தொகுப்பில் யு.ஆர்.அனந்த மூர்த்தியின் ’க்ளிப் ஜாயிண்ட்’ என்கிற கதையை மட்டும் வாசித்து விட்டு தொகுப்பை மூடியது நினைவிற்கு வந்தது. இத் தொகுப்பின் பிற கதைகளோடு ஒப்பிடுகையில் ’க்ளிப் ஜாயிண்ட்’ சுமாரான கதைதான். பெயர் பிரபலமடைவதின் நன்மை இதுதான் போலும். பிரபலத் தன்மையில் விழாதவன் என்கிற நம்பிக்கைகள் என்னைப் பற்றி இருந்தாலும் சில விஷயங்களில் விழுந்துதான் விடுகிறேன்.

சொல்ல வந்தது பி.லங்கேஷ் என்பவர் எழுதிய ’ஓய்வு பெற்றவர்கள்’ என்கிற சிறுகதை குறித்து. ஒரே துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இரண்டு முதியவர்களின் மன விகாரங்களை ஒரு எழுத்தாளன் எதிர் கொள்ள நேரிடும் சந்தர்ப்பம்தான் இச்சிறுகதை. கொஞ்சம் காட்டமாக, படாரென முகத்தில் அடிக்கும் உவமைகளோடு இக்கதை எழுதப்பட்டிருப்பதுதான் என்னை உட்கார்ந்து இதை எழுத வைக்கிறது. இரண்டு முதியவர்களை எழுத்தாளர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
ஞாயிற்றுக் கிழமை நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகில் வந்தார்கள். அதில் ஒருவன் கொஞ்சம் தடிப்பாக உயரமாக இருந்தான்.(....) இன்னொருவனுக்கு அதே வயது. ஒல்லியாக நாய் அடிக்கிற கோலைப் போல இருந்தான்
. இந்த உவமையில் திடுக்கிட்டு வாசிப்பதை நிறுத்தி சிரித்துவிட்டேன். நாய் அடிக்கிற கோல் எவ்வளவு பிரமாதமான உவமை!. ஒரு மனிதனை இப்படி விவரிக்க இயலுமா என ஆச்சரியமாக இருந்தது. கதை சமகால சூழலுக்கும் சரியாகப் பொருந்திப் போகும் அரசுப் பணி ஊழல்களை தோலுறிக்கிறது. லஞ்சத்தில் ஊறித் தடித்த தோல்களைக் கொண்ட மனிதர்களை இழிகிறது. கூடவே வெற்றியடைய முடியாத எழுத்தாளனின் தோல்விப் புலம்பல்களையும் சேர்த்துக் கொள்கிறது. இக்கதை பிடித்துப் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
எழுதுகிறவன் ஒரு வகையான விசித்திரப் பிராணி; அதனாலேயே பல சமயங்களில் தன் வாலின் நிழலைப் பிடிக்க முயன்று தளர்ந்து போகும். அடர்த்தியான காட்டு வழியே குறிக்கோள் என்பதே இல்லாமல் சும்மா நடந்து கொண்டே போகும். உடம்பில் கொழுப்பை வளர்த்துக் கொண்டு இந்த மிருகம் தாவரம், மாமிசம், பாவம், புண்ணியம் எல்லாவற்றையும் செரித்துக் கொண்டு, பால் சொரிந்து சுமை குறைந்த எருமையைப் போல கலங்கிய நீரில் விழுந்து பத்து வட்டமடிக்கும்.
சாகித்ய அகடாமி விருது பெற்ற P.Lankeshஒரு இயக்குனரும் கூட. நான்கு திரைப்படங்களை இயக்கியிருப்பதாய் விக்கி சொல்கிறது - தவறாக ஒரு மலையாளப் படத்தின் இணைப்பைக் கொடுத்திருக்கிறது. இவரின் பிற படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறதா? எனத் தேட வேண்டும். இதுவரைக்குமாய் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கன்னடப் படைப்புகளையும் தேடிப் பிடிக்க வேண்டும்.

 மிகை என எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கியம் கன்னடத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது.

சாதாரணங்களின் கலைஞன்

$
0
0
நேற்று முன்னிரவு சுவறின் மூலைக்காய் மேக் கைத் திருப்பி வைத்துக் கொண்டு கேம் ஆஃப் த்ரோனில் ஆழ்ந்திருந்தபோது வந்த குறுஞ்செய்தியின் வாயிலாக அசோகமித்ரனின் மரணத்தை அறிந்து கொண்டேன். வழக்கமாய் எதிர் கொள்ளும் எழுத்தாளர்களின் அகால மரணங்களைப் போல அதிர்ச்சியோ பதட்டமோ இல்லை. கல்யாணச் சாவுதானே. மிகப் பரிதாபகரமான தமிழ் சூழலில் அசோகமித்ரனின் படைப்புகள் மிகச் சரியாய் எல்லோராலும் உள்வாங்கப்பட்டன. எந்த விமர்சகராலும் அவரது படைப்பின் மேன்மை மீது சிறு கீறலைக் கூட ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ் சூழலில் ஒரு படைப்பாளி பரவலாய் அறியப்பட்டதும் மிகக் குறைவான எதிர்ப்புகளைப் பெற்றதும் இவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு அசோகமித்ரனின் படைப்புகள் யாராலும் நெருங்க முடியாததாக இருந்தன. தனிப்பட்ட அளவில் அவர் எளிமையானவராகவும் இருந்தார். கடைசிக் காலங்களில் பிராமணர்களைக் குறித்து ஓரிரு அபிப்பிராயங்களைப் பகிர்ந்து இணையப் பரப்பில் விமர்சனங்களைப் பெற்றுக் கொண்டாலும் - தினம் யாரிடமாவது இரண்டு வசவுகளை வாங்கிக் கட்டிக் கொள்ளாவிட்டால் அவர்கள் தமிழ் எழுத்தாளர்கள் கிடையாது எனும் தமிழிணைய சூழலில் இந்த விமர்சனங்கள் ஒன்றுமே கிடையாது - அசோகமித்ரன் அடைந்த புகழ் மீது எந்தக் களங்கமும் ஏற்படவில்லை.

 தனிப்பட்ட முறையில் அசோகமித்ரன் எனக்குப் பிடித்தமானவர். நிறைய கதைகளை திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன் அவற்றின் கச்சிதம் குறித்தும் நுணுக்கம் குறித்தும் அறிந்து கொள்ள, ஒவ்வொரு முறையும் புதிதாய் ஒன்றிருக்கும். பொதுவாக எனக்கு மிகப் பிடித்த நாவல்களின் நாயக / நாயகிப் பெயர்கள் அப்படியே மனதில் தங்கிப் போகும் ஆனால் அசோகமித்ரன் படைப்புகளைப் பொறுத்தவரை தண்ணீர் நாவலின் ஜமுனா கதாபாத்திரத்தைத் தவிர வேறெந்த கதாபாத்திரப் பெயர்களும் மனதில் இல்லை. அவரின் ஒட்டு மொத்த படைப்புகளிலேயும் பெரிதான நாயக பிம்பங்கள் கிடையாது என்பதே அவரின் தனிச் சிறப்பு. அசோகமித்ரனின் படைப்புலகத்தை இப்படி ஒரு வரியில் சாதாரணங்களின் கலை என்று சொல்லி விட முடியுமா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதை ஒரு கூற்றாக வைத்துக் கொள்ளலாம். கும்பல்களில் தனித்து தெரிவதை மட்டுமே கவனித்து வந்த நம் இலக்கிய முகத்தை சற்றே மாற்றியமைத்தவர். இந்த அம்சமே அவரது படைப்புலகத்தின் மீது உடனடியாய் கவனத்திற்கு வரும் விமர்சனம் அல்லது பாராட்டு.

 மரணத்தை தம் படைப்பால் எதிர் கொண்டவர். தமிழில் படைப்பிலக்கியம் உள்ள வரை இவரது பெயரை நீக்கிவிட்டு எவராலும் சிறு குறிப்பைக் கூட எழுதிவிட முடியாது போன்ற சம்பிரதாயமான வார்த்தைகளை இந் நாளில் அவசர அவசரமாய் எழுதுவது போலித்தனமானது அல்லது வெறும் மேம்போக்கானது என்பதைப் புரிந்து கொள்கிறேன். வரும் நாட்களில் அசோகமித்ரனின் கதைகளை நாவல்களை கட்டுரைகளை மீள் வாசித்து சில குறிப்புகளை இந்தப் பக்கங்களில் எழுத முயல்கிறேன். ஒரு மகத்தான தமிழ் எழுத்தாளனுக்கு, வாசகனாய் என்னால் செய்ய இயன்ற அஞ்சலி அதுவாகத்தான் இருக்க முடியும்.  

இடி மின்னல் மழை

$
0
0

இந்நாட்டின் பருவநிலை குறித்தான என் சலிப்புகளை இதேப் பக்கங்களில் எழுதித் தீர்த்திருக்கிறேன். மழைக்கான ஏக்கம் வளைகுடாவாசிகள் அனைவருக்குமே பொதுவானது. இந்த வருடம் இந்நிலை மாறியிருக்கிறது. பிப்ரவரி மாதத்திலிருந்து இங்கு மழை பெய்கிறது. கடந்த மூன்று நாட்களாய் இடி மின்னலுடன் மழை சற்று பலமாகவே பெய்கிறது. வழக்கமாய் இரண்டிலிருந்து நான்கு செண்டிமீட்டர் மழை இங்கு பெய்யும். இந்த வருடமோ பத்து செமீ மழையைக் கடந்திருக்கிறோம். ஒரே குதூகலம்தான். ஆனால் இந்நகரம் மழைக்குத் தோதுபட்டதில்லை.இந்த மழைக்கே சாலைகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. வாகன நெரிசலும் இருமடங்காகிவிடும்.

 வெள்ளிக்கிழமை காலை, தூங்கிக் கொண்டிருந்த பயல்களை எழுப்பி எங்கள் பகுதிக்கு அருகாமையிலிருந்த கார்னீஷில் போய் விளையாடி வந்தோம். நிதானமான மழைத் தூறல், ஊடுருவும் குளிர் காற்று, பாலத்திற்கு அடியில் சன்னமாய் நகரும் நதியின் தோற்றங்களை கொண்ட கார்னீஷ் என இந்நகரம் வேறொரு குளிர் ஐரோப்பிய நகரத்தின் சாயலுக்குத் தன்னை மாற்றிக் கொண்டுவிட்டது. மிக நீண்ட வெயில் காலம், குறுகிய குளிர் காலம் என இரண்டே பருவகாலங்களைக் கொண்ட இந்நாட்டிற்கு மழைக்காலம் என்கிற புதுக்காலமும் வந்தேவிட்டதா என சந்தோஷமாய் பேசிக் கொள்கிறோம். அடுத்த வருடம்தான் தெரியவரும்.

 வெள்ளிக்கிழமை முன்னிரவில் இங்கு நடைபெற்ற ஒரு விழாவிற்கு நண்பர் அசோக்குடன் சென்றேன். பழைய எமிரேட்ஸ் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது தொலைவில் மின்னல்கள் பளிச்சிட்டன. மழை வருமோ எனப் பேசிக் கொண்டிருந்தபோதே பெரிய பெரிய தூறல்கள் அதிகமாகி மழை கொட்டத் துவங்கியது. அங்கிருந்து ஷேக் ஸாயித் சாலை வரும்வரை அதே வேகத்தில் மழை கொட்டியது. இவ்வளவு பெரிய மழையை இங்கு வந்து நான் பார்த்ததில்லை. ஒரே நேரத்தில் உற்சாகமும் மெல்லிய பயமும் மனதைக் கவ்வ வாகனத்தை செலுத்தி இடம் வந்து சேர்ந்தேன். நிகழ்வில் குட்டி ரேவதி யை சந்திப்பதுதான் பிரதான நோக்கம். ஆனால் அது நிறைவேறவில்லை. வழக்கமான தமிழ் நிகழ்வு. குழந்தைகளின் நடனம், பாடல்களைக் கேட்பதிலோ பார்ப்பதிலோ எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தமிழ் தொலைக்காட்சிகளில் நகைச்சுவை என்ற பெயரில் குதறி எடுக்கும் மேக் அப் முக பெண்களின் வெறும் பாவணை நிரம்பிய அற்பப் பேச்சுகளைத்தான் சகித்துக் கொள்ள முடிவதில்லை. வெளிநாடுகளில் நிகழும் தமிழர் நிகழ்வுகள் அத்தனையும் இப்படித்தான் இருக்கின்றன. தமிழர்களின் வெகுசன ரசனை அற்ப பாலியல் சமிக்ஞைகளைத் தாண்டி நகரவே இல்லை.

 உள்ளே போய் அமர்ந்த பதினைந்தாவது நிமிடத்தில் வெளியேறினேன். எனக்கும் முன்பு நண்பர் ஆசிப் மீரான் வெளியில் டீ குடித்துக் கொண்டிருந்தார். பார்த்ததும் உற்சாகமாகி அவரை அணைத்துக் கொண்டேன். ஆத்மார்த்தமான உரையாடல் பல வருடங்களுக்குப் பிறகு சாத்தியமானது. தொடர்ந்த நகைச்சுவைகளைக் காணும் தெம்பில்லாமல் அசோக்கும் வெளியே வர, காத்திருந்து குட்டிரேவதியை காணும் மனநிலையை இழந்தோம். ஒன்பது மணிக்கு கிளம்பிவிட்டோம். நம் சூழலில் மட்டும் ஊடக வெளிச்சம் ஏன் சரியான ஆட்களின் மீது விழுவதே இல்லை என அங்கலாய்த்தபடி திரும்பினோம்.

 சனிக்கிழமை கேம் ஆப் த்ரோனின் ஆறாவது சீசனைப் பார்க்கத் துவங்கினேன். இடையில் நிசப்தம் படம் பார்க்காமல் இருப்பது நினைவிற்கு வந்தது. மைக்கேல் அருண் எங்கள் வட்டத்தைச் சார்ந்தவர் என்பதால் நிசப்தம் படம் பார்க்க ஆர்வமாக இருந்தேன். கொரியப் படத்தின் காப்பி என்கிற விமர்சனத்தைப் பார்த்துக் கசந்தேன். நம்மிடம் கதைக்கா பஞ்சம்? இத்தனைக்கும் மைக்கேலைச் சுற்றியும் எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஏன் கொரியா வரைப் போனார் எனத் தெரியவில்லை. எதற்கும் படத்தை பார்த்துவிடுவோம் என ஆரம்பித்தேன். அரை மணி நேரம் தாக்குப் பிடிக்க முடிந்தது. அவ்வளவுதான். நாயகனுக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வரவில்லை. மோசமான இசை, மிகப் பழைய டயலாக்குகள். நிறுத்திவிட்டேன். கைக்காசைப் போட்டு இப்படி ஒரு படம் எடுக்க வேண்டுமா என்கிற பரிதாபம்தான் எஞ்சியது.

 யாக்கை படமும் பார்க்காமல் இருந்தது. நண்பர் லக்‌ஷ்மண் பணிபுரிந்த படம்.நிறைய குறைகள் இருந்தாலும் முழுப் படத்தையும் பார்த்து முடித்தேன். ஸ்வாதியைப் பிடித்திருந்தது. லக்‌ஷ்மணைப் பொறுத்தவரை நல்ல துவக்கம். வெற்றிகளை நோக்கி நகர வாழ்த்துகள். 

தூங்கப் போவதற்கு முன்பு அசோகமித்ரன் குறித்து ஜெயமோகன் பேசிய ஒலிக்குறிப்பைக் கேட்டேன். இழப்பின் வேதனையில் கசந்த பேச்சு என தள்ளிவிட முடியாத அளவிற்கு அப்பேச்சிருந்தது. ஏராளமான தகவல் பிழைகள். அப்பாவிற்கு கார் ஓட்டவே தெரியாது என அசோகமித்ரன் மகனும் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஜெயமோகனுக்கும் அஞ்சலிக் கட்டுரைகளைக்கும் ஏழாம் பொருத்தம். விஷயத்தைக் கையிலெடுத்திருப்பது மாமல்லன் என்பதால் குறைந்தது பத்து நாளிற்கு வாண வேடிக்கை நிச்சயம். அடுத்த டேப் பில் தண்ணீர் திறந்திருக்கிறது. இன்று வாசித்துவிட்டு நாளை எழுதுகிறேன்.

உலகப் பெண்களின் துயர் - தண்ணீர்

$
0
0

என்னுடைய இருபதுகளில் தண்ணீர் நாவலை முதன்முறையாய் வாசித்தேன். பிறகு அவ்வப்போது - வேறு புத்தகங்கள் வாசிக்க கைவசம் இல்லாத பொழுது - அதன் சில பக்கங்களை வாசிப்பதுண்டு. மிகக் குறைவான பக்கங்கள் கொண்ட, மிக மிக சன்னமான மொழியில் சொல்லப்பட்ட இந் நாவலுக்குக் காவியத் தன்மை இருப்பதாய் எண்ணிக் கொள்வேன். நேற்று மிக நிதானமாகவும் கவனமாகவும் தண்ணீரை வாசித்துப் பார்த்தேன். இதன் கச்சிதத் தன்மை இன்னமும் அதே வியப்பைத் தருகிறது.

ஜமுனா, சாயா, டீச்சரம்மா என இந்நாவலில் வரும் மூன்று பிரதான பெண் கதாபாத்திரங்களும், நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையே கிடந்து அல்லாடுகின்றன. நெருக்கடிகள் மிகுந்த, சவால்கள் நிரம்பிய மாநகர வாழ்வை எதிர் கொள்ளும் இப்பெண்கள், உறவுகளாலும் குதறியெடுக்கப்படுகிறார்கள். இதே சாதாரணப் பெண்கள் அத்தனை துக்கத்தையும் அழுதுத் தீர்த்து, அழுந்தத் துடைத்து எறிந்து, நாளைப் பிரச்சினையை நாளை பார்த்துக் கொள்ளலாம் இன்றை வாழ்வோம் என இன்னும் அதிக நெஞ்சுரத்தோடு முன் நகர்கிறார்கள். எந்த மொழியில் இந் நாவலை மொழிபெயர்த்தாலும் அம் மக்களால் இது எங்களின் கதை என சுவீகரித்துக் கொள்ளப்படும். உழைக்கும் பெண்களின் துயர், உலகம் முழுக்க ஒன்றாகத்தானே இருக்கிறது.

 இந்த முறை வாசிக்கும்போது வரிகளுக்கிடையில் பொதிந்து வைத்திருந்த அர்த்தம் ஒன்று புதிதாய் புலப்பட்டது. ஜமுனா, சாயாவைப் பார்க்க அவளின் விடுதிக்குச் சென்றிருப்பாள். ஆரம்பத்தில் ஜமுனாவைக் கடிந்து கொள்பவள், அவளின் மகன் முரளி பற்றிப் பேச்சு வந்ததும் உடைந்து விம்முவாள். ஆறுதலாய் ஜமுனா அவளை அணைக்க முற்படும்போது, சாயா சட்டென்று ஜமுனாவை உதறுவாள். தப்பாக எடுத்துக் கொள்ளாதே இந்த மாதிரி இடத்தில் நாம் கட்டிக் கொண்டால் கூட சிலருக்கு வேறு மாதிரிதான் தோன்றும் என்பாள். இத்தனைக்கும் அது ஒரு பெண்கள் விடுதி. இந்த வரியின் யதார்த்த குரூரம் பயங்கரமாக இருக்கிறது. எழுபதுகளில் பெண்ணும் பெண்ணும் அணைத்துக் கொள்வதைக் கூட கீழ்மையாகப் பார்க்கும் பார்வை சக பெண்களுக்கே இருந்திருக்கிறது.

 பெண்ணுடல் மீது ஆண் செலுத்தும் அதிகாரம், அரசின் மெத்தனம், கடமையைச் செய்ய மறுக்கும் அதிகாரிகள், அரசுப் பணிகளை எடுத்துச் செய்யும் ஒப்பந்தக்காரர்களின் ஊழல் என சாமான்யர்கள் வாழ்வின் மீது நிகழும் பல் முனைத் தாக்குதல்களை இந்நாவல் விசிறலாய் சொல்கிறது. கதையின் முதல் பக்கத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்துவிட்ட மிக நீண்ட தண்ணீர் பஞ்ச அலைவுகளிற்குப் பிறகு பெய்யும் மழை, அத்தனை பிரச்சினைகளுக்கும் முடிவாய் இருக்கும் என நாம் எண்ண ஆரம்பிக்கும்போதே எல்லா வீடுகளிலும் வரும் குடிநீரில் சாக்கடைத் தண்ணீர் கலந்திருக்கும். அந்தத் துயரத்தின் அபத்த முடிவையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை சாயாவும் ஜமுனாவும் அடைந்திருப்பார்கள். கடவுள் குறித்த ஒரு மெல்லிய கிண்டலோடு அதைத் தாண்டிப் போவார்கள். வாசலில் பாஸ்கர் ராவ் காத்துக் கொண்டிருந்தான் என அந்த அத்தியாயம் முடியும்.

தண்ணீர், மலையாளத்திலும் மிகச் சரியான வரவேற்பைப் பெற்றது. என் மலையாள நண்பர்கள் சிலர், அசோகமித்திரன் குறித்தும் இந் நாவல் குறித்தும் மிக உயர்வாக உரையாடியிருக்கிறார்கள். தமிழ் நாட்டை நேசிக்கும் பால் சக்காரியா உட்பட பல மலையாள எழுத்தாளர்களுக்கும் அசோகமித்திரனின் தண்ணீர் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மலையாளச் சூழலில் இருக்கும் ஜெயமோகனுக்கும் இது தெரிந்தே இருக்கும். ஒரு எழுத்தாளன் மிகச் சிறப்பாக எழுதினான். பரவலாய் எல்லோராலும் அறியப்பட்டான். விருதுகளைப் பெற்றான். எங்கும் எதற்கும் தன் முதுகை வளைத்துக் கொள்ள விரும்பாது, சுய எள்ளலோடும் புன்சிரிப்போடுமாய் வாழ்வாழ்ங்கு வாழ்ந்து மறைந்தான் என்பதை ஏன் இவர் இப்படித் திரித்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. போகட்டும் அது அவர் பிரச்சினை.

இரு வேட்டைகள்

$
0
0

ஆதிவாசி மற்றும் பழங்குடி மரபுகளையும் அவர்களின் வாழ்வியல் கூறுகளையும் ஒட்டி சமீபமாய் இரண்டு சிறுகதைகளை வாசித்தேன். இரண்டின் தலைப்பும் வேட்டை தான்.

முதல் வேட்டைக் கதை மகாஸ்வேதா தேவி எழுதியது. குருடா மலைப் பிரதேசத்தில் வசிக்கும் ஓராவ்ன் என்கிற பழங்குடி சமூகத்தின் கதை இது. உயரமும் வாளிப்பும் தனித்த அழகும் புத்திசாலித்தனமும் கொண்ட மேரி என்கிறப் பெண்ணைப் பற்றிய கதை. மேரி, ஓராவ்ன் தாய்க்கும் ஆஸ்திரேலியத் தகப்பனிற்கும் பிறந்தவள். சுதந்திரத்திற்கு முன்பு இம்மலைப் பிரதேசங்களில் வசித்த அந்நியர்கள், உயரமான மரங்களை வளர்த்ததோடு பழங்குடிப் பெண்களின் வயிற்றில் கருவையும் வளர்த்தார்கள். டிக்ஸனின் பங்களாவில் வேலை பார்த்து வந்த மேரியின் அம்மா இப்படித்தான் கருவுற்றாள். பிறகு அந்த பங்களாவை வாங்கிய ராஞ்சியை சேர்ந்த பிரசாத்ஜியிடம் அம்மாவும் பெண்ணும் வேலை செய்கிறார்கள்.

மேரி அப்பிராந்தியத்தின் பேரழகி. துடுக்கானவள். பத்து பேர் செய்ய வேண்டிய வேலையை தனி ஆளாய் கச்சிதமாய் செய்து முடிப்பவள். அவளின் வீரமும் நறுக்குத் தெரிந்த பேச்சும் அவளின் பின்னால் சுற்றும் ஆண்களை சற்றுத் தள்ளி இருக்க வைத்தது. மேலும் அவள் உயரத்திற்கு ஓரவ்ன் சமூகத்தில் ஆண் பிள்ளைகளும் இல்லை. 

பிரஸாத்ஜி யின் தோட்டத்தில் விளையும் பழங்கள் காய்கறிகளைப் பறித்து மேரி, பக்கத்திலிருக்கும் தோக்ரி பஜாருக்கு சென்று விற்று வருவாள். அவளின் நேர்மையும் கறாரான வியாபாரமும் பிரஸாத்ஜி க்கு நிறைய பொருளீட்டித் தரும். தோக்ரி பஜாரில் மேரிக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. ராணியைப் போல் நடந்து கொள்வாள். அவளுக்கான டீ, வெற்றிலை, பீடி எல்லாம் மற்றவர்கள் செலவில் தூள் பறக்கும். ஆனால் ஒருவரையும் அருகில் சேர்த்துக் கொள்ள மாட்டாள்.மேரிக்கு ஜாலிம் என்றொரு முஸ்லீம் காதலன் இருந்தான். என்றைக்கு இருவரிடம் நூறு ரூபாய் சேர்கிறதோ அன்று திருமணம் செய்து கொள்வார்கள்.

 ஓரவ்ன் சமூகத்தினருக்கு மேரி, ஒரு முஸல்மானை திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லைதான் என்றாலும் அவள் முழுமையாய் அச்சமூகத்தை சார்ந்தவள் கிடையாது. தவறான உறவில் பிறந்தவள் என்பதால் ஓரவ்ன் சமூகம் அவளைத் தன்னுடையவளாய் கருதுவதில்லை. பிரஸாத்தின் ஐம்பது ஏக்கர் நிலத்தில் சால் மரங்கள் பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கும். அப்பகுதியின் மர ஒப்பந்தக் காரனான தஷீல்தார் சிங் பிரசாத்தையும் அவர் மகனையும் ஏமாற்றி மிக மலிவான விலையில் அம்மரங்களை வாங்கிவிடுவான். மரங்களை வெட்டுவதற்கு மிக சல்லிசான கூலியில் ஓரவ்ன் மற்றும் முண்டா சமூகத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் வேலைக்கு அமர்த்திவிடுவான். யாராவது கேள்விகள் கேட்டால் அவர்களை சாராயத்தைக் கொடுத்து மடக்கிவிடுபவன் மேரியைப் பார்த்த உடன் காம வயப்படுகிறான்.

 ஒரு காட்டாற்றைப் போன்ற மேரி, தஷீல்தார் சிங்கை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் ஓரம் தள்ளிவிட்டு போய்கொண்டிருப்பாள். அவனின் காமம் முற்றி எல்லை மீறும்போது கத்தியைக் காட்டி மிரட்டவும் செய்வாள். இருப்பினும் அவன் விடாமல் அவளைத் தொடர்ந்து கொண்டிருப்பான். ஆதிவாசிகளின் ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டத்தில் வேட்டை ஒரு முக்கிய அம்சம். ஈட்டி, வில் அம்புகளை எடுத்துக் கொண்டு காடுகளுக்குப் போய் வேட்டையாடி, அங்கேயே அம்மிருகங்களைத் தின்று குடித்து நடனமாடிக் களித்து மாலையில் வீடு திரும்புவார்கள். இந்த வேட்டை சடங்கு பனிரெண்டு வருடங்கள் ஆண்களுக்கானது, அதன் பிறகு வரும் ஒரு வருடம்தான் பெண்களுக்கு.

மொத்த பெண்கள் கூட்டமே அந்த ஒரு வருடத்திற்காக ஆவலாய் காத்திருக்கும். இம்முறை பெண்களின் வருடம். ஆண்கள் அவர்கள் முறையில் என்னவெல்லாம் செய்வார்களோ அதை பெண்களும் செய்வார்கள். கண்ணில் தென்படும் பட்சிகள், முள்ளம் பன்றிகள், முயல் என எதையும் அடித்து சுட்டுத் தின்பார்கள். மூக்கு முட்டக் குடிப்பார்கள் பின்பு மாலையில் வீடு திரும்புவார்கள். தஷீல்தாரின் தொடர்ச்சியான அலைச்சல்களுக்குப் பிறகு மேரி அவனை காட்டிற்கு வரச் சொல்வாள். வேட்டை நாளில் தன்னை அவனுக்கு விருந்தாகத் தருவதாகச் சொல்வாள். அவனும் மகிழ்ந்து போய் அவளுக்காகக் காத்திருப்பான்.

மேரி தன் கூட்டத்தினருடன் காட்டிற்குச் சென்று நன்றாகக் குடித்து நிறையத் தின்று, நடனமாடிக் களித்துவிட்டு  தஷீல்தாரை வரச் சொன்ன பள்ளத்தாக்கை நோக்கிச் செல்வாள். யூகித்தபடி அவனைக் கொன்றுவிட்டு தன் காதலனைத் தேடிச் செல்வாள். ஒரு பழங்குடிப் பெண் தன் நிலத்தின் ஆதாரங்களை அழிப்பவனைக் கொல்வது கிட்டத்தட்ட ஒரு மிருகத்தைக் கொல்வதைப் போலத்தான். என்ன இந்த ஒப்பந்தக்காரன் கொஞ்சம் பெரிய மிருகம். இவனை வேட்டையாடியதன் மூலம் மற்ற நாலு கால் மிருகங்களின் மேல் அவளுக்கிருந்த பயம் முழுமையாய் விலகிவிட்டதாய் கதை முடியும்.

 ஒரு சாகஸக் கதை போலத் தெரிந்தாலும் காட்டின் விவரணைகளும், பழங்குடியினர் வாழ்வு முறைகளும் வாசிக்கப் பரவசத்தை ஏற்படுத்தியது. காட்டின் வாழ்வு மீதும், ஜிப்சி வாழ்க்கை முறையின் மீதும் ஏற்கனவே எனக்கு ஏக்கம் இருப்பதால் இந்தக் கதை அதிகம் பிடித்துப் போனது. வங்கப் படைப்புகளுக்கே உரிய நிலக் காட்சி விவரணைகளும் இயற்கைக் குறிப்புகளாய் மஞ்சள் நிற கிஷ்கிந்தப் பூ, சிவப்புப் பலாச மரங்கள், மஹீவா மரங்கள், ஸால் மரங்கள் போன்ற புதுப் பெயர்களும் இச்சிறுகதையில் இடம்பிடித்திருந்தன.

 0


 இரண்டாவது வேட்டைக் கதை யூமா வாசுகி எழுதியது. கர்நாடகத்தின் கூர்க் சமூகத்தினரைப் பற்றிய கதை. அவர்களின் சடங்குகள், பண்பாட்டு முறைகள் குறித்து விலாவரியாய் இக் கதையில் சொல்லப்பட்டிருக்கும். எனக்கிருக்கும் தற்போதைய மனநிலையில் யாராவது கர்நாடகம், கன்னடம் எனச் சொல்ல வாயெடுத்தாலே ஆஹா எனச் சொல்லிவிடுவேன் போல. திதி படமும் வாசித்துக் கொண்டிருக்கும் கன்னடப் படைப்புகளும் அந்நிலத்தின் மேல் அப்படியொரு வாஞ்சையை உருவாக்கி விட்டிருக்கின்றன. மேலும் குடகு எனக்கு மிகவும் பிடித்த நிலப் பகுதி. கூர்க் என்னால் மறக்கவே முடியாத அனுபவங்களைத் தந்திருக்கிறது.

ஒரு குடும்பத்திற்குள் நிகழும் பெண் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஏமாற்றம்தான் இக்கதை. அத்தை மகளை மணமுடிக்க இயலாமல் போனவனின் துயரமும் அவனை நேசிக்கும் தந்தையின் வெளிப்பாடும் கூர்க் பண்பாட்டுத் தளத்தின் பின்னணியில் கதையாய் எழுதப்பட்டிருக்கும். கதையை விட இதில் விவரிக்கப்பட்டிருக்கும் கூர்க் சடங்குகள் பெரும் வியப்பைத் தந்தன.

கூர்க் சமூகத்தினரின் திருமணச் சடங்குகள் மிகவும் விசேஷமானவை. பறை இசையும் பாரம்பரிய நடனமும் திருமணத்தின் முக்கிய அம்சங்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து தாள கதிக்கு ஏற்றார்போல் ஆடவேண்டும். இந்த ஆட்டத்தில் தோற்பது பெரும்பாலும் ஆண் தான். தோற்ற ஆணைப் பெண்கள் கிண்டலடித்துத் துரத்துவார்கள். நிகழ்வின் அடுத்த பிரதானமான அம்சம் குடிதான். எவ்வளவு ரூபாய்க்கு மதுவகைகளை வாங்குகிறார்களோ அதை வைத்தே திருமணத்தின் பிரம்மாண்டம் அளக்கப்படும். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என அந்நாளில் எல்லோரும் தவறாமல் குடிப்பார்கள். குடித்து மயங்கி விழும் சிறுவர்களை அளவாய் குடித்த அம்மாக்கள் ஓரமாய் படுக்க வைப்பார்கள்.

பெண்ணுக்கு மருதாணி வைத்துவிடுவது, எல்லா மதுவகைகளையும் ஒரு பெரிய கலனில் கொட்டி காக் டெயில் தயாரிப்பது, ஒரு பாத்திரத்தில் அதை மொண்டு சகலருக்கும் ஊற்றுவது என சகலவிதமான மதுக் கொண்டாட்டங்களும் திருமணத்தில் உண்டு. மேலதிகமாய் பெண்ணை திருமண வீட்டிலிருந்து ஐம்பது அடி தள்ளி நிற்க வைத்து விடுவார்கள். மாப்பிள்ளையின் தம்பி அப் பெண்ணை வீட்டிற்குள் விடக் கூடாது. பெண்ணும் அவளது தோழியும் எப்படியாவது மாப்பிள்ளையின் தம்பியை ஏமாற்றி வீட்டிற்குள் நுழைய வேண்டும். மாப்பிள்ளையின்  தம்பிக்குத் துணையாய் அவன் அம்மா, பெண்ணை வீட்டிற்குள் விட்டுவிடாதே நம்மைப் பிரித்துவிடுவாள் என எச்சரித்துக் கொண்டே இருப்பாள். பெண்ணின் தாய் தந்தையரோ வழி மறிப்பவனுக்கு விதம் விதமான மதுவகைகளை புகட்டி, மது ஊற்றி அவனை மயக்கமடையச் செய்து பெண்ணை வீட்டிற்கு உள்ளே விட வேண்டும். இந்த சடங்கு கூர்க் சமூகத்தில் வெகு பிரசித்தம். கதையில் இச்சடங்கு மிகப் பிரமாதமாய் எழுதப்பட்டிருக்கும்.

 கூர்க் சமூகமும் வேட்டைச் சமூகம்தான். இடையில் கத்தி கொண்ட, கருப்பு நிற பாரம்பரிய உடையணிவார்கள். வாக்குத் தவறாமை, நேர்மை போன்றவை அவர்களின் அடிப்படை இயல்புகள்.  வளர்ந்த கூர்க் சமூகம் மெல்ல தன் பழமைகளிலிருந்து விடுபட்டு கல்வி மற்றும் வேலை நிமித்தமாய் நகரப் பொது வாழ்விற்கு தங்களை பழக்கிக் கொண்டார்கள். அதன் வெளிப்பாடாய் ஷகீலா,  தன் மாமன் மகனான பொனாச்சாவை திருமணம் செய்து கொள்ள விரும்பாமல்  தனக்குப் பிடித்த இன்னொருவனை திருமணம் செய்து கொள்கிறாள். தன் அண்ணனான உஸ்மானிக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் ஷகீலாவின் பெற்றோர்கள் மீறுகிறார்கள். அந்நிகழ்விற்கு செல்லும் , தன்னை எப்போதுமே ஒரு கூர்க் ஆக மட்டுமே உணரும் உஸ்மானி என்ன செய்கிறார் என்பதுதான் கதை. 

நல்ல அனுபவத்திற்கு இரண்டு கதைகளும் உத்திரவாதம்.


 நன்றி :  அழியாச்சுடர்கள் தளம்.

வேட்டை கதை 

வேசி மகன்

$
0
0

'Bastard son' - Game of Thrones தொடரில் புழங்கும் சொல் இது. முறையான திருமண உறவின் வழியாய் பிறக்காத குழந்தைகளை இப்படி அழைக்கிறார்கள். பிரபுக்களின் குழந்தைகளாக இருந்தாலும், ராஜாவின் மகன்களாக இருந்தாலும், இழிவும் புறக்கணிப்பும் அக்குழந்தைகளின் பிறப்பிலிருந்து தொடரும். தந்தையின் பெயரை முதல் பெயருடன் சேர்த்துக் கொள்ள அனுமதி கிடையாது. அரசாளும் உரிமையும் கிடையாது, அவர்களின் இலட்சினையை அணிந்து கொள்ளவும் அனுமதி கிடைக்காது.

 மிகத் துல்லியமான விவரணைகளோடு கட்டியெழுப்பிய இன்னொரு உலகத்தில் Game of Thrones கதைகள் நிகழ்கின்றன. பெரும்பாலான நிகழ்வுகள் Westeros என அழைக்கப்படும் ஒரு கண்டத்தில் நிகழ்கின்றன. இக் கண்டம் ’செவன் கிங்க்டம்ஸ்’ என அழைக்கப்படும் ஏழு ராஜ்ஜியங்களின் ஆளுகைக்கு உட்பட்டது . இந்த ஏழு ராஜ்ஜியங்கள் North, Iron Islands, Riverlands, Vale, Westerlands, Stormlands, Reach, Crownlands, and Dorne ஆகிய ஒன்பது நிலப்பிரதேசங்களைக் கொண்டது . இந்த ஏழு ராஜ்ஜியங்களையும் ஆளும் அரசன் அமரும் இடம் கிங்க்ஸ் லேண்டிங் . அவரது இருக்கை ஐயர்ன் த்ரோன். இந்த இரும்பு இருக்கையைக் கைப்பற்ற இந்த ஏழு ராஜ்ஜியங்களுக்கி டையே  நிகழும் போட்டியும் போர்களும்தான் பிரதானக் கதை. மற்றபடி எண்ணிடலங்காக் கிளைக் கதைகளும் உள்ளன. அவை குறித்து மெதுவாய் எழுதுகிறேன். இப்போதைக்கு இந்த பாஸ்டர்ட் விவகாரத்தைக் கவனிப்போம்.


 ஜான் ஸ்நோ, நெட் ஸ்டார்க் கின் பாஸ்டர்ட் மகன். அவனுடைய தாய் யார் என்பது ரகசியமாகவே இருக்கும். நார்த் பகுதியின் அடையாளம் - உறை பனி எனவே அப்பகுதியின் பாஸ்டர்ட் மகன்களுக்கு ஸ்நோ தந்தைப் பெயராக இருக்கும். இன்னொரு உதாரணம் ரூஸ் போல்டன். அவரின் பாஸ்டர்ட் மகன் பெயர் ராம்ஸி ஸ்நோ.


 காட்டுவாசிகள் மற்றும் பனிப்பேய்களிடமிருந்து நாட்டைக் காக்க - மிக உயரமான சுவர்கள் நாட்டின் எல்லையில் எழுப்பப்பட்டிருக்கும். அதைக் காக்கும் வீரர்கள் ’நைட்ஸ் வாட்ச்’ எனப்படுவர். இரவு பகலாக காவல் வேலைக்கு தன்னை அர்ப்பணிக்கும் இவ்வீரர்களை ’ப்ரதர்ஸ்’ அல்லது ’க்ரோ’ எனும் அடைமொழியிட்டு அழைப்பார்கள். இந்த காவல் பணிக்கு ஜான் ஸ்நோ தந்தையால் அனுப்பி வைக்கப்படுவான். தானொரு ’பாஸ்டர்ட்’ என்பதில் அவனுக்கு ஆழமான வருத்தங்களும் காயங்களும் உண்டு. நெட் ஸ்டார்க்கின் மனைவி லேடி ஸ்டார்க் ஜானை அங்கீகரிப்பதில்லை. ஆனால் ஜானின் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும்  அவன்  மீது அன்பு உண்டு.  நைட்ஸ் வாட்சில் பல்வேறு இன்னல்களுக்கும் அவமானங்களுக்கும் இடையில் ஜான் தன்னுடைய வீரத்தாலும் தியாகத்தாலும் மேலெழுந்து வருகிறான். ஒரு கட்டத்தில் நைட்ஸ் வாட்சின் தலைமை பொறுப்பையும் ஏற்கிறான். இதயத்தில் அன்புமிக்க ஜான் தன் கருணையால் செத்தும் மீண்டும் பிழைக்கிறான். புறக்கணிப்பும் அவமானமும் ஒரு மனிதனை நாயகனாக மாற்றும் என்பதற்கான உதாரணம் ஜான்.


இதற்கு நேரெதிரான கதாபாத்திரம் ராம்ஸி. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட அவமானங்கள் ராம்ஸி ஸ்நோவை குரூரம் மிக்கவனாய் மாற்றியிருக்கும். ராம்ஸியின் வீரத்திற்கான பரிசாய் ரூஸ் போல்டன் அவனைத் தன்னுடைய மகனாய் அறிவிப்பார். ராம்ஸி ஸ்நோ - ராம்ஸி போல்டன் என அழைக்கப்படுவான். மேலும் துயரத்தில் அலைக்கழியும் பேரழகி சன்ஸா ஸ்டார்க்கை திருமணமும் செய்து வைப்பான். ஆனாலும் ராம்ஸியின் வெறியும் கொலைத் தாண்டவங்களும் ஒரு முடிவிற்கு வராது. ’கோல்ட் ஹார்ட்டட் பாஸ்டர்ட்’ என நம்மை முணுமுணுக்க வைக்கும் அளவிற்கு அவன் வெறியாட்டமிருக்கும். க்ரேஜாய்  , சன்ஸா ஆகியோருக்கு அவன் இழைக்கும் கொடுமைகளைப் பார்க்க முடியாது. தந்தைக்கு இன்னொரு ஆண் குழந்தை பிறந்ததால் தன் உரிமையைக் காத்துக் கொள்ள, தந்தையையும் அவரின் மனைவியையும் அப்போதுதான் பிறந்த குழந்தையையும் கொல்வான்.

 புறக்கணிப்பின் இருவேரு முகங்கள் இவை.

 இத் தொடரின் மிக சுவாரஸ்யமான கதாபாத்திரம் டிரியன் லானிஸ்டர் எனும் குள்ளர். அபாரமான நகைச்சுவையும் ஆழமான அறிவும் கொண்டாட்டமான வாழ்க்கை முறையும் அடியாழத்தில் மிக நேர்மையும் கொண்ட ஒரு கதாபாத்திரம். அவருக்கும் ஜான் ஸ்நோவிற்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல் இது.

 Tyrion Lannister: "And you, you're Ned Stark's bastard, aren't you? Did I offend you? Sorry. You are the bastard, though."

Jon Snow: "Lord Eddard Stark is my father."

Tyrion Lannister: "And Lady Stark is not your mother, making you...the bastard. Let me give you some advice, bastard. Never forget what you are. The rest of the world will not. Wear it like armor, and it can never be used to hurt you."

Jon Snow: "What the hell do you know about being a bastard?"

Tyrion Lannister: "All dwarves are bastards in their fathers' eyes."

 புறக்கணிப்பை பிறப்பிலிருந்து எதிர்கொள்ளும் குள்ளர், இன்னொரு புறக்கணிப்பிற்கு ஆறுதல் கூறும் பகுதி இது. கேம் ஆப் த்ரோனின் திரையாக்கத்தை விட திரைக்கதைதான் எனக்கு அவ்வளவு பிடிக்கிறது. இத்தொடரின் வசனங்களை எத்தனை பேர் கொண்ட எழுதுகிறதோ எனத் தெரியவில்லை. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும் அவ்வளவு ஆழத்தையும் விசாலத்தையும் கொண்டுள்ளது.

‘பாஸ்டர்ட் ‘  அவமானங்களைச் சித்தரிக்கும் இதே கதையில் இன்னொரு மீறலும் இருக்கும். டோர்ன் என அழைக்கப்படும் பகுதி நாகரீக வளர்ச்சியின் உச்சம் பெற்ற பகுதி. அங்கு இந்த பிறப்பின் அடிப்படையிலான மரியாதைகள் ஒரு பொருட்டில்லை. பாஸ்டர்களை காதலின் தீவிரத்தால் பிறந்தவர்கள் என அடையாளப்படுத்தும் போக்கும் டோர்ன் நகரத்தில் உண்டு. டோர்ன் இளவரசியான எல்லாரியா சாண்ட் ஒரு பாஸ்டர்ட். அவளுக்குப் பிறந்த எட்டு மகள்களும் பாஸ்டர்ட்கள் தாம். அந்நகரத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கும் பிறப்பு ஒரு பொருட்டு கிடையாது.

 இப்படி ஒரே கதையில் பல்வேறு திறப்புகளை நிகழ்த்துவதால் தான் கேம் ஆஃப் த்ரோன் மிக முக்கியமான தொடராகிறது. நேற்று பகிர்ந்து கொண்ட மகாஸ்வேதாதேவியின் வேட்டைக் கதையில் வரும் மேரியும் ஒரு பாஸ்டர்ட் மகள். அவளுக்கு நேரிடும் புறக்கணிப்பை வாசிக்கும் போது கேம் ஆப் த்ரோனின் வேசி மகன்/ள் புறக்கணிப்பும் நினைவிற்கு வந்ததால் இங்கே எழுதிப் பார்த்தேன்.

 சில விஷயங்கள் காலம், நிலப்பிரதேசம், நிஜம், புனைவு போன்றவற்றைக் கடந்ததாய் இருக்கின்றன.

முதல் சினிமா

$
0
0


சினிமா எழுத்தாளனாய் என்னுடைய முதல் அறிமுகம் மலையாளத்தில் இருக்குமென எதிர்பார்த்திருக்கவில்லைதாம். ஆனால் அது நிகழ்ந்தே விட்டது. நண்பன் பினு பாஸ்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் கோட்டையம் என்கிற மலையாளப் படத்திற்கு எழுதியிருக்கிறேன். கனடாவில் வசிக்கும் சஜித் தயாரிக்கும் படமிது. 'என்ஆர்ஐ ப்ரடியூசர்'என்கிற பதமெல்லாம் சஜித்திற்கு பொருந்தாது. அவரும் என்னைப் போல மாத சம்பளத்திற்கு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர். சினிமா மீதிருக்கும் ஆர்வம் மற்றும் பினு மீதிருக்கும் நம்பிக்கை NITEVOX எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கக் காரணமாக இருக்கலாம். இந்நிறுவனத்தில் நானும் ஒரு அங்கம். 

எங்களின் முதல் படம் 30 நிமிடக் குறும்படமான Road Song. இதில் வரும் தமிழ் பகுதியை நான் எழுதினேன். போர்ச்சுகல் நாட்டிலிருந்து பினுவும், கனடாவிலிருந்து சஜித்தும், துபாயிலிருந்து நானுமாய் மூன்று தேசங்களிலிருந்தபடியே இந்தப் படத்தை உருவாக்கினோம். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 'ரோட் சாங்'தந்த நம்பிக்கையில் என்னுடைய இருபது வெள்ளைக்காரர்கள் குறு நாவலை திரைக்கதையாக எழுதினோம். பினுவிற்கு இந்த நாவலின் மீதும் அதன் உலகளாவியக் கட்டமைப்பின் மீதும் பைத்தியம் இருந்தது. எப்படியாவது திரையில் இருபது வெள்ளைக்காரர்களைக் கொண்டு வந்துவிட வேண்டுமென இரண்டு வருடங்கள் அலைந்தான். பணம் இருபது வெள்ளைக்காரர்களை காத்திருக்க வைத்திருக்கிறது. கோட்டையம் எங்களைக் கரைசேர்த்தால் அடுத்த படம் இருபது வெள்ளைக்காரர்கள்தாம்.

 கோட்டையத்தின் மூலக் கதை கஃபூரினுடையது. சஜித்தும் பினுவும் ஒருவருடமாக இக்கதையை வேறு வேறு வடிவில் எழுதிப்பார்த்து, பணம் கிடைக்கும் நேரத்தில் காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். இறுதி வடிவத்திற்கும் முழுமை செய்வதற்குமாய் என்னை அழைத்தார்கள். நானும் பினுவும் சஜித்தும் சேர்ந்து இத் திரைக்கதையை முழுமை செய்தோம். பத்து இரவுகளை இத்திரைப்படத்திற்காய் அர்ப்பணித்தேன். நிச்சயம் புது அனுபவம்தான். சினிமா வேலை ஒன்றும் நான் நினைத்துக் கொண்டிருந்தது போல அத்தனை ஆடம்பரமானதில்லை. முதல் மூன்று நாட்களிலேயே விழி பிதுங்கியது. மிக சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்னால் உழைக்க முடியவில்லை. இரவு முழுக்க தூங்காமல் கதையிலோ எழுத்திலோ விழுந்து கிடக்க முடியவில்லை. நான்கு நாட்கள் குருவாயூரில் இருக்கும் பினுவின் புராதன வீட்டிலும், நான்கு நாட்கள் என் திருவண்ணாமலை வீட்டிலும், இரண்டு நாட்கள் பினுவின் குடிலிலுமாய் அமர்ந்து எழுதி முடித்தோம்.

எங்கள் மூவருக்குமிடையே இருக்கும் அலைவரிசை ஒற்றுமையால் கறாராய் கருத்துகளை முன் வைக்கவும், நிறைய விஷயங்களை களையவும் முடிந்தது. மிக சுதந்திரமாய் இயங்கினேன். இதுவரைக்கும் ஒரு படத்திற்கு மூன்று மொழிகளில் எழுதியிருக்கிறார்களா என்பது தெரியாது. ஆனால் இப்படத்திற்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் பயன்படுத்தினோம். திரைப்பட உருவாக்கத்தில் வேறு சில சாகசங்களையும் செய்திருக்கிறோம் அவற்றைப் பிறகு எழுதுகிறேன். ஸ்க்ரிப்ட் அளவில் படம் பிரமாதமாய் வந்திருக்கிறது. ஒரு சினிமாவின் மற்ற அம்சங்களும் சரியாக சேர்ந்தால் நிச்சயம் கோட்டையம் வெற்றி பெறும்.

எந்தப் பின்புலமும் இல்லாமல் திறமை ஒன்றையே நம்பி அசுரத்தனமாய் உழைத்துக் கொண்டிருக்கும் கோட்டையம் குழுவினற்கு வாழ்த்துகள். படம் வெளிவந்த பிறகு விரிவாய் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
Viewing all 133 articles
Browse latest View live